அம்மா மேடையில் செஞ்ச வேலை.. துடிதுடித்த ரிதன்யா.. இதை மட்டும் பண்ணலைன்னா இனி தடுக்க முடியாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பலரின் குடும்பங்களுக்கு.. முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள பல குடும்பங்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டு சென்று இருக்கிறது வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்ட ரிதன்யாவின் மரணம். அவர் தற்கொலை தானே செய்து கொண்டார்.. கொலையா என்று கேட்டால்.. ஆம் உண்மையில் அது தற்கொலைதான். ஆனால் இதை காலம்காலமாக நமது சமுதாயம் கடைப்பிடித்து வரும் பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் காரணமாக நடத்தப்பட்ட கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.

Tirupur

ரிதன்யா தற்கொலை

ரிதன்யா தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வோல்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார்.கடைசியாக வீட்டிற்கு வந்த ரிதன்யா தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஜூன் 28-ம் தேதி காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதை மட்டும் பண்ணலைன்னா இனி தடுக்க முடியாது!

ரிதன்யா மரணத்திற்கு ஒரு வகையில் தமிழ்நாடு இன்னமும் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும் காரணமாக அமைந்துவிட்டது.

1. உதாரணமாக.. 300 பவுன் நகை போட்ட ரிதன்யா பெற்றோர் அதை பெருமையாக நினைத்துக்கொண்டனர். அதோடு ரிதன்யா அம்மா அதை திருமண மேடையிலேயே பெருமையாக தூக்கி காட்டினார்.

2. இது போன்ற செயல்கள் வரதட்சணையை மேலும் தூண்டவே செய்யும். கவின் போன்ற குடும்பத்தினருக்கு.. இன்னும் வரதட்சணை கேட்கும் தைரியத்தை கொடுக்கும்.

3. வரதட்சணை அசிங்கம் என்று யோசிக்காமல்.. அதை மேடையில் தூக்கி காட்டும் அளவிற்குத்தான் அவர்களின் நிலைப்பாடுகள் இருந்துள்ளன.

4. அதோடு ஒரு பெண் கணவன் இல்லாமல் இருப்பதை விட உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு குடும்பத்தின் செயலாக இருக்க வேண்டும். ஆனால் ரிதன்யா அப்பாவோ.. என் மகள் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா.. அதை நினைச்சா பெருமையாதான் இருக்கு என்று வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா அப்பா அண்ணாதுரை சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.

5. பலர் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க. சிலர் அப்படி இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள். மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க , அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. அதை நினைத்து பெருமைப்படுகிறேன். என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. என்று வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரிதன்யா அப்பா அண்ணாதுரை சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.

6. தனது மகள் உயிரோடு இருப்பதை விட.. கணவன் இல்லாமல் இருப்பது, 2வது திருமணம் செய்வது தவறானது என்று நினைக்கும் அளவிற்குத்தான் சமுதாயம் உள்ளது.

7. கல்யாணம் ஆன 10-வது நாளே ரிதன்யா, "அவங்க வீட்டில் கொடுமைப்படுத்துறாங்கம்மா, என்னால் அங்கே இருக்க முடியாது" என்று கூறியுள்ளார். ஆனால், ரிதன்யாவின் பெற்றோர் "அதெல்லாம் போக போக சரியாகிடும், சகிச்சுக்கிட்டு இருந்துடுமா" என்று கூறியுள்ளனர்.

8. தங்கள் பகுதியில் ஊரார், உறவினர்கள் தன் மகள் வீடு திரும்பி வந்துவிட்டால் தவறாக பேசுவார்கள் என்பதால், பெற்ற மகளின் கஷ்டத்தை கூட செவி கொடுத்து கேட்காமல் விட்டேந்தியாக பேசியுள்ளனர். அந்த பேச்சே ரிதன்யாவிற்கு தனக்கு ஆதரவு செய்ய யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இப்போதே நமது குடும்பங்கள், சமுதாயங்கள்.. ஆணாதிக்கம், குடும்ப ஆதிக்கம், வரதட்சணை கொடுமை, சமுதாய அழுத்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். இல்லையென்றால் ரிதன்யாவின் மரணங்களை தடுப்பது இயலாத காரியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+