இப்படியே போனால்.. ஹைதராபாத், பெங்களூர் சென்னையை பின்னுக்கு தள்ளிவிடும்.. அதிர்ச்சி சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்கள் சென்னையை போக்குவரத்து ரீதியாக பின்னுக்கு தள்ளும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

சென்னை பொதுவாக போக்குவரத்தில் மற்ற நகரங்களை விட சிறப்பானது. அதாவது சென்னைக்கு பொதுப்போக்குவரத்து வசதி சிறப்பாக உள்ளது. சென்னையில் பேருந்துகள், மெட்ரோ, மின்சார ரயில் தொடங்கி ஆட்டோ, ஷேர் ஆட்டோ என்று பொதுவாக மக்கள் பயணிக்க நிறைய வசதிகள் உள்ளன.

How Hyderabad and Bangalore will over take Chennai interms of Bus services in metro?

சென்னையின் வளர்ச்சிக்கு சிறந்த பொதுப்போக்குவரத்தும் முக்கியம் ஆகும். ஆனால் கடந்த 10 வருடங்களாக சென்னைக்கு புதிதாக பெரிய அளவில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை.

உதாரணமாக ஏற்கனவே இருந்த வெள்ளை நிற ஏசி பேருந்து உட்பட ஏசி பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது சிறிய அளவிலான சிலர் நிற ஏசி பேருந்துகள் ,மட்டுமே உள்ளன. இது போக சிவப்பு நிறத்தில் அரசு சில பேருந்துகளை வாங்கியது. இதை தவிர சென்னைக்கு என்று பேருந்துகள் வாங்கப்படவே இல்லை.

மற்ற நகரங்கள்; மற்ற ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் ஏசி பேருந்துகள் அதிக அளவில் உள்ளன. உதாரணமாக பெங்களூரில் நீல நிற ஏசி பேருந்துகள் அதிகம், உள்ளன. இது போக பர்பிள் நிற இவி பேருந்துகள் கடந்த 2 ஆண்டுகளில் அதிகம் வாங்கப்பட்டு உள்ளன.

ஹைதராபாத்தில் இவி பேருந்துகள் அடுத்தடுத்து வாங்கப்பட்டு வருகின்றன. இப்படி இவி பேருந்துகள், ஏசி பேருந்துகளில் பெங்களூர், ஹைதராபாத் கவனம் செலுத்தும் நிலையில் சென்னைக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படுவது இல்லை.

ஆனால் சென்னைக்கு புதிதாக பேருந்து வாங்க வேண்டிய டெண்டர் மட்டும் நாளுக்கு நாள் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அதிலும் கடைசியாக விடப்பட்ட சில டெண்டர் 4-5 முறை கூட தள்ளிபோய் உள்ளது. பேருந்துகளை புதிதாக வாங்காமல் அரசு இதே நிலையில் தொடர்ந்தால் சென்னை விரைவில் அதன் பொழிவை இழக்கும்.

ஏற்கனவே சாலைகள் பல்வேறு பணிகளுக்காக குழிகளாக தோண்டப்பட்டு உள்ள நிலையில் தற்போது பேருந்து வசதியும் இப்படி சரிவை நோக்கி செல்வதால் சென்னையின் பொது போக்குவரத்தே பாதிக்கப்படும். சென்னை மற்றும் தமிழ்நாட்டை மையப்படுத்தி பின்வரும் டெண்டர்கள் பேருந்துகளை வாங்க விடப்பட உள்ளன. ஆனால் அந்த பேருந்துகள் எப்போது சாலைகளில் களமிறங்கும் என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.

மின்சார பேருந்துகள்; ஏற்கனவே தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகள் பொது-தனியார்-கூட்டு மாதிரியின் கீழ் இயக்கப்படும், அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும், நடத்துநர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசு ஒரு கிமீ அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் புள்ளி B வரை மின்சார பேருந்துகளை இயக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 2026-ம் ஆண்டு முதல் புதிய டீசல் பேருந்துகள் வாங்குவதை நிறுத்தும் யோசனையுடன் தற்போதுள்ள டீசல் பேருந்துகளை எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இருப்பினும், திட்டமிட்டபடி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்கள் சரியாக நடப்பதை பொறுத்தே இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெண்டர்: சென்னையில் பேருந்துகளை இயக்கி வரும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (எம்டிசி) 100 மின்சார பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியை KfW (ஜெர்மன் டெவலப்மென்ட் பேங்க்) மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ₹2 கோடி வழங்கும். டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு இணையாக, முதற்கட்டமாக, உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் சுமார் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு ஒரு மாதத்தில் டெண்டர் விடவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 500 மின்சார பேருந்துகளுக்கு நீட்டிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+