கலகத்தலைவன் எப்படியிருக்கு..வாக்கிங் போன போது கேட்ட முதல்வர்..அமைச்சர் சொன்ன பதில் செம்ம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டதற்கு இந்த படத்தை அனைவரும் அமைதியாக இருந்து ரசித்தனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கலகத்தலைவன்

கலகத்தலைவன்

கலகத் தலைவன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. வித்தியாசமான திரில்லர் படமாக இருப்பதாக கலகத் தலைவன் படத்துக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

ஆக்சன் நாயகன் அவதாரம்

ஆக்சன் நாயகன் அவதாரம்

மகிழ் திருமேனியின் கிரைம் திரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள கலகத்தலைவன் வித்தியாசமான திரில்லர் படமாக இருப்பதாக ரசிகர்களிடம் இருந்து பாராட்டி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக ஆக்சன் ஹீரோவாக மாற முயற்சி செய்திருக்கும் படம் கலகத்தலைவன். இந்த படம் திமுகவினரால் குறிப்பாக இளைஞர் அணியினரால் அதிகம் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

கலகத் தலைவன் படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் தமிழக முதல்வர், உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் அருமையாக இருப்பதாக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் உதயநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து படம் வெற்றி பெற வாழ்த்தி இருந்தார். சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கருத்து கூறியிருந்தார்.

 படம் எப்படியிருக்கு

படம் எப்படியிருக்கு

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி செய்யும் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். தனது மகன் நடித்த திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்ன மாதிரியான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை தெரிந்து கொள்வதில் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் அதிக ஆர்வத்துடன் அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கேட்டார்.

அமைதியாக ரசிக்கிறார்கள்

அமைதியாக ரசிக்கிறார்கள்

கலகத்தலைவன் திரைப்படம் குறித்து கருத்து கூறியுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியம், முதல் நாளில் நான் திரைப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்ல வந்திருக்கிறது. சில திரைப்படங்களில் பாடல் வரும்போது பெண்கள். உட்பட பலர் எழுந்து சென்று விடுவார்கள். ஆனால், இந்த படத்தை அனைவரும் அமைதியாக இருந்து ரசித்தனர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+