உடல் மெலிந்த நிலை.. மூச்சு திணறல் பாதிப்பு.. எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் கூறியது என்ன என்பதை பார்ப்போம். அவருக்கு மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதால் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களை கடந்து வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் ஆண்டு கைது செய்தனர். அவரிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை வி்சாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 48ஆவது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கு வரும் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று மதியம் செந்தில் பாலாஜிக்குதிடீரென மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இதயவியல் துறை மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
செந்தில் பாலாஜிக்கு மூச்சுவிடுவதில் இருந்த பிரச்சினைகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கோரிய வழக்கில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர் செய்ய உத்தரவிட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. செந்தில் பாலாஜி மாஸ்க் அணிந்து கொண்டு உடல் மெலிந்த நிலையில் காணப்படுகிறார்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications