தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச மின்சார நுகர்வு.. ஆனால் பவர் கட் இல்லையே! சாதித்த மின்வாரியம்
சென்னை: தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை நேற்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு நேற்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மின் தேவை உச்சம்; அதீத மின் தேவை காரணமாக கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. அது ஆளும் திமுக மீது விமர்சனமாக மாறியது.
இந்த முறை லோக்சபா தேர்தல் வேறு வரும் நிலையில் மின்சார தடை பிரச்சனையாக மாற கூடாது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார துறை முக்கிய அறிவிப்பு: இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.
TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும்.
மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேகமான நடவடிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
புகார்கள்: அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.
புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது.
புதிய நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி , உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கு இடையில் பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications