சென்னை காவேரி மருத்துவமனையில் பி.சுசீலா! எப்படி இருக்கிறார்? எப்போது வீடு திரும்புகிறார்?
சென்னை: 88 வயதாகும் பழம்பெரும் பாடகி பி. சுசீலா, சிறுநீரக கோளாறு, வயோதிகம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 9 மொழிகளில் பாடல்களை பாடியவர் சுசீலா. இவர் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தென்னிந்தியாவின் இசைக் குயில், மெல்லிசை அரசி என பட்டப் பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் பி.சுசீலாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
5 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலா பெற்றுள்ளார். சினிமாவுக்கு தொண்டாற்றியதாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. அது போல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. 88 வயதாகும் இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி.சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பி.சுசீலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு வயோதக பிரச்சனைகளுடன் சிறுநீரக கோளாறும் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சுசீலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
இதனிடையே பி.சுசீலா உடல்நலக் குறைவு குறித்து அறிந்த ரசிகர்கள் அவர் உடனடியாக நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பி.சுசீலா முடி காணிக்கை செலுத்தினார். அப்போது நாராயண மந்திரம் என்ற பக்தி பாடல் பாடி திருப்பதி ஏழுமலையானை வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் முடி காணிக்கை செய்த புகைப்படங்களும் இணையதளத்தில் பரவின.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications