இது தான் வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்க்கை.. என்னப்பா பார்க்கும் போதே கண்ணு வேர்க்குது.. வீடியோ
சென்னை: வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் பலர் சொந்தங்களை, உறவுகளை , நண்பர்களைவிட்டு பிரிந்து செல்வது மிகவும் கடினமானது. அதைவிட கடிமானது கணவன், மனைவி, குழந்தைகளை பிரிந்து செல்வது. ஒரு தாய் தனது குழந்தைகளை பிரிய மனமில்லாமல் மனதை கல்லாக்கி கொண்டு பிரிந்து செல்லும் நெகிழ்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
வசீகரா படத்தில் விஜய்யை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மணிவண்ணன் விரும்புவார். இது தொடர்பாக விஜய் பேசும் போது, நான் வெளிநாடு போய் சம்பாதித்து கார், வீடு என வாங்கினாலும் அதை போட்டோ எடுத்து தான் அனுப்பி வைக்க முடியும். அதே இங்கிருந்தால் சொந்தமாக ஸ்கூட்டர் வாங்கினாலும் என் அப்பாவை வைத்து ஓட்டுவேன்..

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் நானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்வேன் ஆனால் வெளிநாட்டில் இருந்தால் மருந்து சாப்பிட்டயா, டாக்டரிடம் போனியா என்று தான் கேட்க முடியும். சொந்த ஊரில் வாழ்வது போன்ற வாழ்க்கை எதுவும் இல்லை என்ற பாணியில் விஜய் அதில் பேசி முடிப்பார். அப்படி வாழ்வதை தான் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நிஜம் வேறாக உள்ளது. பிழைப்பு தேடி பிள்ளைகளை பிரிந்து சொந்தங்களை பிரிந்து, சொந்த ஊரை விட்டுவிட்டு, யாரோ ஒரு சிலரை தாண்டிவெளி உலகமே இல்லாமல், வாழ்ந்து சம்பாதிப்பார்கள். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே மனைவியுடன் வாழ முடியாமல், பிறந்த குழநதைகளை உறவினர்கள் போல சில நாட்கள் மட்டும் வந்து பார்த்து செல்வது கடினமானது.
அதைவிட கொடுமை பெற்ற தாய் தன் பிள்ளைகளை பிரிந்து வெளிநாடு செல்வது, என்ன தான் தந்தை, சித்தி, அத்தை, பாட்டி உள்ளிட்ட உறவுகள் உடன் இருந்தாலும், தாய் உடன் இருப்பது போல் வராது. அதேபோல் பிள்ளைகள், கணவனை பிரிந்து மனைவி வெளிநாடுகளில் வேலைக்கு செல்வது என்பது கடினமான முடிவு. ஆனால் பொருளாதாரத்தில் பலமாகவும், தங்கள் குழந்தைகள் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பலரும் தங்கள் இளமை காலத்தை வெளிநாடுகளில் தான் கழிக்கிறார்கள். 40வயதை கடந்தபின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு கட்டி, பிள்ளைகளை படிக்க வைத்து, கல்லூரியில் சேர்த்து நல்லபடியாக வாழ வைக்கிறார்கள்.
என்ன நமக்கும் கண்ணு வேர்க்குது 🥺🥺 pic.twitter.com/LWLx4xdRao
— BINDU-ബിന്ദു. (@_BindhuR_) December 11, 2023
இதற்காக அவர்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.. தங்களின் ஏக்கம் வலி, எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டிவைத்து கொண்டு வருடம் ஒருமுறை எப்படியாவது ஊருக்கு வர வேண்டும் என்று ஏங்கி கிடப்பார்கள். வெளிநாட்டில் வாழ்பவர்களை பொறுத்தரை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாமே தங்கள் சொந்த ஊருக்கு வரும் நாள் தான்.. ஒரு தாய் தனது குழந்தைகளை பிரிய மனமில்லாமல் மனனை கல்லாக்கி கொண்டு பிரிந்து செல்லும் நெகிழ்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காண்போரை கலங்க வைத்துள்ளது. பாருங்கள்..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications