Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உஷார் ப்ளீஸ்.. கொரோனா டெஸ்ட்டிலிருந்து தப்பிக்க கேரள ரயில் பயணிகள் செய்யும் "ட்ரிக்ஸ்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து ரயில் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டி பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறி வருவதாக களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த பல வாரங்களாக கொரோனா நோய்த் தொற்று பரவும் விகிதம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு, பல்வேறு மாநிலங்களும் பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கின்றன.

கர்நாடகாவை பொறுத்தளவில் கேரள மாநில எல்லை மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள தங்களது மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறது.

சாலைகளில் பள்ளம்

சாலைகளில் பள்ளம்

இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கேரள மாநிலத்தில் இருந்து வரக்கூடிய எல்லைப்புற பகுதிகளில் சில இடங்களில் காவல்துறையினரே குறுக்கு சாலைகளில் குழிதோண்டி வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கேரள ரயில் பயணிகள்

கேரள ரயில் பயணிகள்

தமிழகத்திலும் கேரள மாநில எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் ரயில்கள் மூலமாக எளிதாக பயணிகள் தமிழகத்திற்கு வருகிறார்கள். குறிப்பாக சென்னை நகருக்கு கேரளாவிலிருந்து வரும் ரயில் பயணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

கட்டாய பரிசோதனை

கட்டாய பரிசோதனை

இதை மனதில் வைத்துதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர், பரிசோதனை செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ, கட்டாயமாக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

எல்லை மாவட்டங்கள்

எல்லை மாவட்டங்கள்

இதே மாதிரி, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களுக்கு அதிகளவில் கேரளாவிலிருந்து பயணிகள் வருகிறார்கள். அவர்களின் , ஆதார் எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தமிழக அதிகாரிகள் வாங்கி பதிவு செய்து வருகிறார்கள். அதேநேரம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டு அதற்கான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது கிடையாது.

சிகிச்சை வழிமுறைகள்

சிகிச்சை வழிமுறைகள்

சென்னையை பொருத்தளவில் கொரோனா பரிசோதனைக்கு உள்ளான ரயில் பயணிகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கி வருகிறது. ரயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தில்லுமுல்லு பயணிகள்

தில்லுமுல்லு பயணிகள்

இந்த நிலையில்தான் ஒரு தில்லுமுல்லு அரங்கேறி வருவது நமது கள ஆய்வில் தெரியவந்தது. கேரளாவிலிருந்து வரும் பயணிகள் தங்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டால் கட்டுப்பாடுகள் அதிகரித்துவிடும் அல்லது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள் என்று பயப்பட்டு அதில் இருந்து தப்பிப்பதற்கு சில தில்லுமுல்லுகளை செய்து வருகின்றனர்.

வேறு மாநில ரயில் பயணிகளோடு கலந்து விடுகிறார்கள்

வேறு மாநில ரயில் பயணிகளோடு கலந்து விடுகிறார்கள்

கேரள ரயில்கள் வந்து நிற்கும் பிளாட்பாரத்தில் இறங்கும் சில பயணிகள் அங்கே இருந்து வேறு மாநிலங்களிலிருந்து வரும் ரயிலுக்கான பிளாட்பாரத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, கர்நாடகாவில் இருந்து ஒரு ரயில் அந்த பிளாட்பாரத்திற்கு வருகிறது என்றால் அந்த பயணிகள் வெளியேறும் போது இவர்களும் அவர்களோடு சேர்ந்து வெளியேறுகிறார்கள். எனவே அதிகாரிகள் அவர்களை பரிசோதனை செய்வது கிடையாது. இவ்வாறு எத்தனையோ நோயாளிகள் சென்னைக்குள் ஊடுருவ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மோசடி செய்பவர்கள் தப்பிப்பதா

மோசடி செய்பவர்கள் தப்பிப்பதா

எந்த நோக்கத்துக்காக பரிசோதனை செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் முற்றிலுமாக அடிபட்டுப் போகிறது. தில்லுமுல்லு செய்யாதவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மோசடி செய்பவர்கள் சோதனையில் இருந்து தப்பிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்கு கேரள மாநிலத்தில் இருந்து ரயில்கள் வந்ததும் அங்கே இருந்து இறங்கும் பயணிகள் அனைவரையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும், பிளாட்பாரம் மாறி சென்று அமர்ந்து இருப்பவர்களுக்கு ம் பரிசோதனைகள் நடத்தப் பட வேண்டும் என்று சென்னை மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை
    உஷார் மக்களே

    உஷார் மக்களே

    ரயில்வே மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவை இணைந்து இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், அல்லது தமிழகத்திலும் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து விடும் அபாயம் இருக்கிறது என்று தொற்றுநோய் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

    கேரள நிலவரம்

    கேரள நிலவரம்

    ஜூலை 25 மற்றும் 31 க்கு இடையிலான ஒரு வாரத்தில் கேரளா ஒரு மில்லியனுக்கு 24 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா ஒரு மில்லியனுக்கு 12 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவின் ஏழு நாள் சராசரி தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் 0.61% ஆக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியா 0.13% ஆகவும் உள்ளது. கேரளா மாநிலத்தின் ஆர்-நாட் (இனப்பெருக்கம் விகிதம்) 1.28 ஆகும், அதன் தினசரி ஆக்டிவ் கேஸ்கள் மற்றும் இறப்புகள் இப்போது நாட்டில் மிக அதிகம் ஆகும். சுகாதார நிபுணர் ரிஜோ எம் ஜான் இதுபற்றி கூறும் போது, "கேரளாவின் கோவிட் -19 இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது, இது கவலைக்குரிய விஷயம். முதல் அலையை விட இரண்டாவது அலையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது" என்றார்.
    கேரளாவில் ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான நிலவரப்படி 60 வயதுக்கும் மேற்பட்ட 23.7 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் 33 சதவீதம் பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள 43.3 சதவீதம் பேரும் கேரளாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 22,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கேரளாவில் 1,77,924. பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+