Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளிப் பாத்திரத்தை வீட்டில் எவ்ளோ வைத்திருக்கலாம்? நகையை? வருமான வரிச்சட்டம் தரும் அதிர்ச்சி உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை குறைந்தபாடியில்லை.. தங்கத்துக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகின்றன.. வெள்ளி விலையின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதற்கு காரணங்கள் பல உள்ளன.. அதேபோல வீட்டில் வெள்ளியை எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கும் விதிமுறைகள் பல உள்ளன.. அதுகுறித்து வருமான வரிச்சட்டம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து வைத்து கொள்வதும் அவசியமாகும்.

அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு, ஒரு சவரன் தங்கம் எப்படியும் ஒரு லட்சத்தை தாண்டும் என்றார்கள்.. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது..

Silver Jewellery Income Tax Act Silver

தங்கம், வெள்ளி விலை

தற்போது ஒரு கிராம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167க்கும், ஒரு கிலோ ரூ.1,67,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே, வெள்ளி விலையும் காலை, மாலை என ஒரே நாளில் விலை உயரும் சூழ்நிலை கடந்த மாதத்தில் ஏற்பட துவங்கியது.. அதாவது வெறும் 4 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் உயர்ந்த ஆச்சரியமும் நடந்தது.

வெள்ளிக்கான டிமாண்டு

வெள்ளியின் அதீத விலை உயர்வுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.. தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடினமான காலங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது.. இது வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படுகிறது..

அதேபோல தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது.. உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன..

இவைகளில் சோலார் மின்தகடு, லித்தியம் பேட்டரி, எலக்ட்ரிக் வாகனங்கள், எலக்ட்ரிக் கம்பிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், AI தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், வெள்ளிக்கான தேவையும் உயர்ந்து, அதன்மூலம் விலையும் அதிகரிக்க செய்கிறதாம். .

வெள்ளியில் முதலீடு

அதுமட்டுமல்ல, இதுவரை வெள்ளியில் முதலீடு செய்யாதவர்களும், இனி அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட துவங்கியிருப்பதும், சிறு முதலீட்டாளர்களும் கையிருப்பில் வெள்ளியை வாங்கி வைத்துக் கொள்வதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எனினும் வீட்டில் வெள்ளி சேமிப்பில் ஏதேனும் வரி விதிகள் அல்லது வரம்புகள் உள்ளனவா? வெள்ளியை ஒருவர் எந்த அளவுக்கு வீட்டில் வைத்திருக்கலாம்? இதுகுறித்து வருமான வரிச் சட்டம் (1961) என்ன சொல்கிறது? என்பது குறித்தும் தெரிந்துவைத்து கொள்வது அவசியம்.

வெள்ளி வீட்டில் எவ்வளவு வைத்திருக்கலாம்

அதன்படி, எவ்வளவு வெள்ளி வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம்... வெள்ளிக்கு வரம்புகளும் இல்லை. அந்த வெள்ளி கடைகளில் வாங்கியதாக அல்லது பரம்பரை பரம்பரையாக வந்ததாககூட இருக்கலாம்.. ஆனால், அந்த வெள்ளிக்கு ரசீதுகள் அல்லது பில்கள் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்...

காரணம், வருமான வரித்துறையினர் சோதனை செய்ய நேர்ந்தால், வெள்ளியை சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை அதிகாரிகளுக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு வெள்ளிக்கும், உரிய ரசீது அவசியம். ஒருவேளை ஆதாரம் காட்ட முடியாமல் போனால், அது அறிவிக்காத சொந்தமாக கருதப்பட்டுவிடும். அவைகள் கணக்கில் வராத செல்வம் (Unexplained Wealth) என கண்டறியப்பட்டால் அதற்கு வரி விதிக்கப்படும்,

ரசீது, ஆவணங்கள் அவசியம்

அதேபோல வெள்ளியை நகையாக அல்லாமல், முதலீடாகக் கருதினால், அதை விற்கும்போது கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். 24 மாதங்களுக்குள் விற்றால், அது Short Term Capital Gains அதாவது குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், 24 மாதங்களுக்கு பிறகு விற்றால், Long Term Capital Gains அதாவது நீண்ட கால மூலதன ஆதாயமாக (LTCG) இருக்கும்.

ஆக, உங்களுக்கு தேவைப்படும அளவுக்கு வெள்ளியை வாங்கி வீட்டில் வைத்திருக்கலாம்.. ஆனால் அதற்கான ரசீது, ஆவணங்கள் அவசியம்.. இதனை பத்திரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+