வேளாண் பணிகள் இனி ஈஸி.. மானியம் மழை பெய்யப் போகிறது.. விவசாயிகளே நீங்க ரெடியா? முழு விவரம் இதோ!
சென்னை: வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டத்தினை பிரபலப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் வெளியிட்டுள்ளார்.
சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அது தொடர்பான முழு விவரம் வருமாறு;

மானியம் விவரம்
தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-23 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

எந்தெந்த இயந்திரங்கள்
இத்திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.5 இலட்சம், மினி டிராக்டருக்கு ரூ.2.25 இலட்சம், பவர்டில்லருக்கு ரூ.85,000/-, நெல் நடவு இயந்திரத்திற்கு ரூ.5 இலட்சம், களையெடுக்கும் இயந்திரத்திற்கு ரூ.63,000/- சுழல் கலப்பைக்கு ரூ.44,800/-, விதைப்புக் கருவிக்கு ரூ.24,100/-, நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூ.75,000/-, கொத்துக் கலப்பைக்கு ரூ.50,000/-, நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.11 இலட்சம். பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரத்திற்கு ரூ.2.50 இலட்சம், கரும்பு சோகையை துகளாக்கும் கருவிக்கு ரூ.1.25 இலட்சம், தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவிக்கு ரூ.63,000/-, வைக்கோல் கட்டும் கருவிக்கு ரூ.2.25 இலட்சம், கரும்பு சோகை உரிக்கும் கருவிக்கு ரூ.75,000/-, புதர் அகற்றும் கருவிக்கு ரூ.30,000/-, தட்டை வெட்டும் கருவிக்கு ரூ.20,000/- மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 1615 வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள்
விவசாயிகள் உற்பத்தி செய்த சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு சிறுதானிய சுத்திகரிப்பு, பயறு உடைத்தல், எண்ணெய் பிழிதல் போன்ற வகைகளில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

சூரிய கூடார உலர்த்தி
இயற்கையில் அதிகமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலைக் கொண்டு, கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை, முருங்கை இலை போன்ற வேளாண் விளைபொருட்களை சுகாதாரமான முறையில் சீராக உலர்த்தி, விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிட தனிப்பட்ட விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில், 400 முதல் 1000 சதுர அடி வரை பாலிகார்பனேட் தகடுகளுடன் கூடிய சூரிய கூடார உலர்த்தியை நிறுவுவதற்கு, 40 சதவிகித மானியம் வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வழங்கப்படும்
வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம்சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

80 சதவிகித மானியம்
வேளாண் இயந்திர சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து, பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கி கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்கு 80 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் வழங்கப்படும்.

ரூ.60 இலட்சம் வரை மானியம்
அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

வேளாண் உட்கட்டமைப்பு நிதி
வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்கு, மானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கு, வங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பெறும் கடனுக்கு, வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (Agriculture Infrastructure Fund) கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது https;//aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்
அ) ஆதார் அட்டையின் நகல் ஆ) புகைப்படம் இ) சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல் ஈ) ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications