தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்.. வாங்கண்ணே பேசிக்கலாம்! இறுதியாய் வந்த அழைப்பு! ஓகே சொன்ன ஓபிஎஸ்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடப்பது 100% உறுதியாகிவிட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் அதில் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மூத்த நிர்வாகி ஒருவர் அழைத்ததாகவும், எதுவாக இருந்தாலும் அங்கே பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதை அடுத்தே ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது.. என்பது போல கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீடித்து வந்த விவகாரங்களும் சர்ச்சைகளுக்கும் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நடக்குமா? நடக்காதா? என்ற பலத்த விவாதங்களை ஏற்படுத்திய அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வேன் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக பொதுக்குழு
முன்னதாக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கும், பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என தொண்டர்களுக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஓபிஎஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் ஆனால் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என இபிஎஸ் தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் ஒப்புதல்
இந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் ஓபிஎஸ்ஸின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானங்களில் இரட்டை தலைமை ஒழிப்பு, ஒற்றை தலைமை தீர்மானங்கள் இல்லாத நிலையில்தான் ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தாலும் ஓபிஎஸ்ஸுடன் ஆலோசித்த பிறகே கொண்டுவரப்படும் என இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் உறுதியளித்தனர் எனவும், இதையடுத்தே அவர் பொதுக்குழுவுக்கு வர சம்மதித்து இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இபிஎஸ்க்கு பெரும்பான்மை
அதேநேரத்தில் பொதுக்குழுவை கூட்டி அதில் பெரும்பான்மை நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதால் ஒற்றை மற்றும் இரட்டை தலைமை குறித்த தீர்மானங்களை வாக்கெடுப்புக்கு கொண்டு வந்து அதனை வெற்றி பெறச்செய்ய எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஒற்றைக்காலில் நின்ற பன்னீர்செல்வம் தற்போது பொதுக்குழுவுக்கு வருவதற்கு சம்மதித்தது எப்படி அதற்கான பின்னணி என்ன என்பது குறித்தும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

பறந்து வந்த தூது
எப்படியிருந்தாலும் பொதுக்குழு நடத்தப் போவது உறுதி, எம்ஜிஆர் காலம் முதல் அனைத்து பொது குழுக்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பொதுக்குழு நடக்கவில்லை என்றால் அது எதிர்கட்சியான திமுக கடும் கேலி செய்யும் அளவுக்கு சென்றுவிடும். எனவே எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசிக்கொள்ளலாம் நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என இபிஎஸ் தரப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து இபிஎஸ் தரப்புக்கு போன ஒரு மூத்த நிர்வாகி பேசியுள்ளார்.
Recommended Video

பலமான திட்டம்
தற்போது எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கிய நிலையில் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே தற்போதைக்கு முதல்வர் வேட்பாளர் பொறுப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் விட்டுக் கொடுத்தது போல பொதுக்குழுவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை கைவிரித்து, நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், அதே நேரத்தில் கட்சியில் தான் இருந்தால்தான் பிற்காலங்களில் எதுவும் செய்யமுடியும் என உணர்ந்து இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர் பொதுக்குழுவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications