Srikanth: பிரபல நடிகர்கள் விவாகரத்து டூ ஸ்ரீகாந்த் போதை கேஸ்.. எல்லாத்தையும் இணைக்கும்.. அந்த ஒரு புள்ளி!
சென்னை: சமீப காலமாக தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் அதிகரித்திருப்பதற்கும், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருப்பதற்கும் கோலிவுட்டின் பார்ட்டி கலாச்சாரமே முக்கிய காரணம் என பரவலாக பேசப்படுகிறது.
கோலிவுட் பார்ட்டி கலாச்சாரம்: விவாகரத்திற்கும் போதைக்கும் காரணமா?
கோலிவுட் வட்டாரங்களில் பார்ட்டி கலாச்சாரம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த பார்ட்டிகளில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இது எப்படி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு நடிகர் திரையுலகில் பெரிய இடத்தைப் பிடித்த பிறகு, இதுபோன்ற பார்ட்டிகளை நடத்துவது வழக்கம். அதில் சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் சில தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு குழுவாக உருவாகி, ஒருவருக்கொருவர் வாய்ப்புகள் கொடுப்பது, தங்கள் குழுவில் உள்ளவர்களை முன்னேற்றுவது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.
இது ஒரு குழுவாக இருந்தாலும், தவறில்லை. கல்லூரியில் நண்பர்கள் குழு சேர்வது போலத்தான் இதுவும். ஒரே மாதிரியான எண்ணங்களைக் கொண்ட நடிகர்கள், நடிகைகள் இப்படி குழுவாக இணைவது சகஜம்.

முன்பு ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனிக் குழு இருந்தது. அவர்கள் அடிக்கடி பார்ட்டி கொண்டாடினர். ஆனால் இப்போது அந்தக் குழுக்கள் இல்லாவிட்டாலும், புதிய குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த குழுக்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவது, மது அருந்துவது, போதைப் பொருட்கள் உபயோகிப்பது சகஜமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக, கொக்கைன் போன்ற போதைப் பொருட்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சில குழுக்களில் காதல் மற்றும் அதையும் தாண்டிய உறவுகளும் ஏற்படுவதுண்டு. இவை அனைத்தும் இரு தரப்பின் சம்மதத்துடன் நடக்கின்றன. சில நடிகர்களைப் பற்றி வரும் புரளிகள் மற்றும் கிசுகிசுக்கள் கூட இங்கிருந்து திட்டமிட்டுப் பரப்பப்படலாம். ஒரு நடிகர் மற்றொரு நடிகரை பிடிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கிசுகிசுக்களைக் கிளப்பிவிடலாம் அல்லது அவருடன் நடிக்க வேண்டாம் என்று தனது குழுவிற்கு உத்தரவிடலாம். இதெல்லாம் சினிமா உலகில் சகஜமாக நடக்கும் விஷயங்கள்.
இந்த பார்ட்டிகளில் காதல் மற்றும் உறவுகள் சகஜம் என்பதால், இது போன்ற பார்ட்டிகள் விவாகரத்துக்கு வழி வகுக்கின்றன. அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. அதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ரஜினிகாந்த் கூட இப்போது பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. ஆனால் அதே வயதுடைய தெலுங்கு நடிகர்கள் அடிக்கடி பார்ட்டி நடத்துகிறார்கள்.
பார்ட்டி கலாச்சாரம் நட்பு, போதைப் பழக்கம் மற்றும் விவாகரத்து வரை பல விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. விவாகரத்து வரை செல்லாத பட்சத்தில், போதைப் பழக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆக, கோலிவுட்டில் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கும், போதைப் பொருள் வழக்குகளுக்கும் பார்ட்டி கலாச்சாரம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications