Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானிக்கு துறைமுகம் போனால் சீனாவுக்கு அடி விழும்? சேது சமுத்திர திட்டத்தால் இப்படியும் ஒரு டுவிஸ்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் கனவு திட்டங்களில் ஒன்றான சேது சமுத்திர திட்டத்திற்கான தடை விலகி தற்போது தமிழ்நாடு சட்டசபையில் அந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், சேது சமுத்திர திட்டத்தின் காரணமாக அதானிக்கு கிடைக்கப் போகும் லாபம் குறித்தும், சீனாவுக்கு ஏற்படப்போகும் இழப்பு பற்றியும் அலசுவோம்.

இந்திய பெருங்கல், அரபிக் கடல், வங்காள விரிகுடா வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள், இந்தியாவின் முக்கிய துரைமுகங்களான, குஜராஜ், மும்பை, விளிஞ்சம், தூத்துக்குடி, எண்ணூர், காரைக்கால், ஆந்திரவின் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகம், ஒடிசாவின் தம்ராவின் துறைமுகங்களுக்கு இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருந்தது.

இதனால் இலங்கையின் கடலோர மார்க்கம் மற்றும் அங்குள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிக்கும், துறைமுகங்களுக்கும் கிடைக்கவில்லை.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம்

இந்த நிலையில் சர்வதேச கப்பல்களையும், இந்திய கப்பல்களையும் தமிழ்நாட்டின் கடல் மார்க்கமாக வரவைத்தால் பயண தூரமும், நேரமும் எரிபொருள் செலவும் சிக்கனமாகும் என்ற யோசனை ஆங்கிலேயர்களுக்கு வந்தது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும் இடையிலான மிக குறுகலான கடல் பகுதியில் ஏராளமான மணல் திட்டுக்கள் உள்ளன.

 ஆங்கிலேயர்கள், நேரு காலத்து திட்டம்

ஆங்கிலேயர்கள், நேரு காலத்து திட்டம்

ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இந்த மணல் திட்டு பகுதியில் கப்பல்கள் செல்வதற்கான கால்வாய் அமைப்பதே சேது சமுத்திர திட்டமாகும். இதனால் தமிழ்நாடு உட்பட இந்திய கடல் மார்க்கமும், கடலோர பகுதிகளும் மிகப்பெரிய வானிப தளமாக உருவெடுக்கும். ஆனால், அப்போது அதை செய்து முடிக்க இயலவில்லை. அதன் பிறகு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர முயன்று முடியவில்லை.

திட்டமும் தடையும்

திட்டமும் தடையும்

இந்த நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த மணல் திட்டு போன்ற ஆதம் பாலத்தை ராமர் பாலம் என்று சொல்லி பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டில் சேதுசமுத்திர திட்டத்துக்கு தடை விதித்தது.

 சட்டசபையில் தீர்மானம்

சட்டசபையில் தீர்மானம்

இந்த நிலையில் அந்த மணல் திட்டு பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்காக சான்றுகள் இல்லை என்பது தொல்லியல் ஆய்வில் தெரிய வந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.

அதானிக்கு லாபம்

அதானிக்கு லாபம்

இந்த சூழலில் சேது சமுத்திர திட்டத்தால் தொழிலதிபர் அதானிக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்றும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இதனால் பலத்த அடி விழும் என்றும் பேசப்படுகிறது. அதற்கு காரணம் துறைமுகங்கள். தொழிலதிபர் கவுதம் அதானி, மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையால் இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்களை தன்னுடைய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.

அதானியின் துறைமுகங்கள்

அதானியின் துறைமுகங்கள்

பல தனியார் துறைமுகங்களையும் கட்டி வருகிறார். குறிப்பாக குஜராத்தில் உள்ள முந்த்ரா, கந்த்லா, தஹேஜ், ஹஜிரா துறைமுகங்கள் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவாவில் உள்ள மொர்முகாவ் துறைமுகம், கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் அமைத்து வருக் துறைமுகம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம், ஒடிசா மாநிலம் தம்ரா துறைமுகங்கள் அதானியின் கைவசம் உள்ளன.

 இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம்

இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம்

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பெருமளவில் அதானிக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் தூரம், நேரம் கருதி, இலங்கையை சுற்றிக்கொண்டு செல்வதற்கு பதில், சேது சமுத்திர கால்வாய் வழியாக சர்வதேச கப்பல்கள் சென்றால், இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சீனாவுக்கு ஏன் இழப்பு?

சீனாவுக்கு ஏன் இழப்பு?

இதில் சீனாவுக்கு என்ன இழப்பு என்றால், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த சீன அரசு, இதில் 837 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்து இருக்கிறது. எனவே சேது சமுத்திர கால்வாய் வந்தால் சீனாவுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் காரணமாக பொருளாதார அளவில் பெரிய பயன்கள் கிடைக்காது என்றும், தமிழ்நாட்டின் 140 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியில் சூழலியல் பாதிப்பு ஏற்படும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+