தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு எல்லாம் செல்ல இனி இ-பாஸ் கட்டாயம்.. முழு விவரம்
சென்னை: வகை ஒன்றில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களுக்கு, வகை இரண்டு மற்றும் வகை 3ல் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற்றால் தான் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல் வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வகை இரண்டு மற்றும் வகை 3ல் உள்ள மற்ற 27 மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ஆகும்.
இதேபோல் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு, குற்றாலம் மற்றும் மலைகளில் உள்ள கோடைவாசல் தளங்களுக்கு அவசர காரியங்களுக்காக செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரிடம் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

யாருக்கு தேவையில்லை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்து இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம். அதாவது அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த பயணங்களுக்கு இ-பாஸ்/இ-பதிவு இனி தேவையிலலை.

வகை 3ல் செல்ல தேவை
ஆனால் வகை ஒன்றில் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வகை இரண்டில் மற்றும் வகை 3ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பாஸ் கட்டாயம் ஆகும்.

கோவை திருப்பூர்
இதேபோல் வகை 2ல் மற்றும் 3ல் உள்ள மாவட்டத்தினர், வகை ஒன்றில் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ஆகும்.

எப்படி வாங்குவது
வகை1ல் இருந்து வகை இரண்டு அல்லது 3ல் உள்ள மாவட்டங்கள் செல்ல அல்லது வகை இரண்டு மற்றும் 3ல் உள்ளவர்கள் வகை இரண்டில் உள்ள மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இபாஸ் கட்டாயம் ஆகும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து https://eregister.tnega.org/#/user/pass என்ற லிங்க்கில் மணமகள் அல்ல மணமகன் அல்லது அவர்கள் பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். திருமண நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

கொடைக்கானல்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இபாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications