கிராம நத்தம் நிலங்களுக்கும் ஆன்லைனிலேயே பட்டா.. விண்ணப்பிப்பது எப்படி என வருவாய் துறை விளக்கம்
சென்னை: கிராம நத்தம் நிலங்களை பலரும் வாங்குகிறார்கள்.. அவர்களுக்காகவே அரசு புதிய வசதியை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா மாறுதல் பணிகள் முழுமையாக ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. .இனி கிராம நத்தம் நிலங்களை வாங்கி வசிப்போர், அதனை விற்க முழு அதிகாரம் பெற போகிறார்கள். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்க முடியும்.

அதன் அடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservices.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடீயும்.
"நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து வந்தனர். எனினும் முழுமையாக கிராம நத்தம் நிலங்களுக்கு ஆன்லைன் பட்டா மாறுதல் இல்லாமல் இருந்தது. குறிப்பாக நகரங்களை ஒட்டியப் பகுதிகளில் கிராம நத்தம் நிலங்கள் விற்பனை அதிகரித்த போதிலும். நத்தம் நிலங்களுக்கு மேனுவல் முறையில் பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆன்லைனில் பட்டா பெற விண்ணப்பிக்க முடியாத நிலையே நீடித்து வந்தது
இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் நத்தம் நில ஆவணங்கள் கணினி முறைக்கு மாற்றப்பட்டன. இதனால் நத்தம் நிலங்களின் பட்டா விபரங்களை ஆன்லைன் முறையில் பார்க்க, பெயர் மாற்றம் செய்ய வாய்ப்பு உருவானது. கடந்த 2024 முதல் நத்தம் நிலங்களை ஆன்லைனில் பார்க்க முடிகிறது. ஆனால் மாற்ற முடியாத நிலை இருந்து வந்தது.
எனினும் பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து நத்தம் நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அரசு அனுமதித்த 2024 முதல் தற்போது வரை 50000 நத்தம் நில பட்டா பெயர் மாற்றப் பணிகள் ஆன்லைன் முறையில் நடந்துள்ளது.இனி நத்தம் பட்டா மாறுதல் பணிகளை ஆன்லைனில் மட்டுமேசெய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க போகிறது.இனி கிராம நத்தம் நிலங்களை வாங்கி வசிப்போர், அதனை விற்க முழு அதிகாரம் பெற போகிறார்கள். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications