உங்கள் வீட்டு கிச்சனில் துர்நாற்றம் வருதா.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.. வேற லெவலில் மணக்கும்
சென்னை: இப்போது கல்லூரியை முடித்துக் கொண்டு இளைஞர்கள் பலரும் தனியாகவே இருந்து வரும் நிலையில், வீட்டை எப்படி ஈஸியாக பராமரிக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது இளைஞர்கள் தனியாக இருப்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. படிப்பு, வேலை என பல்வேறு காரணங்களால் உறவுகள் இப்போது தனியாகவே இருக்கிறார்கள்.
இளைஞர்கள் தனியாக இருப்பதால் அவர்கள் பல்வேறு விதமான விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்கிறார்கள். குறிப்பாக குக்கிங் நடைபெறும் சமையலறையை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும், மசாலா டப்பா முதல் சமைக்கப்படும் உணவுகள் வரை பல வித வாசனைகள் சமயலறையில் இருக்கும்.. இதனால் நாம் எவ்வளவு சுத்தமாக நமது கிச்சனை வைத்திருந்தாலும் கூட சில நேரங்களில் அங்கே இருந்து துர்நாற்றம் ஏற்படும். எதனால் இப்படி துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை நம்மால் உடனடியாக கண்டறியவே முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக எப்படி எஸ்கேப் ஆக வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
கிச்சனில் இருந்து திடீரென இதுபோன்ற துர்நாற்றம் ஏற்பட்டால், பேப்பர் அல்லது துணியில் கற்பூரத்தைக் கட்டி வையுங்கள். இதேபோல மடித்து அதை கிச்சனின் வெவ்வேறு மூலைகளில் வைக்கவும். இப்படிச் செய்வதால் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தைக் குறைக்க முடியும். ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை கற்பூரத்தை மாற்றிவிடுங்கள்.
மேலும், திடீரென நாற்றம் வந்தால், கிச்சனை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பஞ்சில் எசன்ஷியல் ஆயிலில் நனைத்து வைத்தும் மோசமான நாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். அதீத நாற்றம் வீசினால், 1 முதல் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலக்கி கிச்சனில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதன் மூலம் எவ்வளவு மோசமான துர்நாற்றமாக இருந்தாலும் இது இயற்கையாகவே கணிசமாகக் குறையும்,

இயல்பாகவே கிச்சன் வாசனையுடன் இருக்க கிச்சனில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி வாசனை பூக்களை வைத்து நிரப்பி வையுங்கள். பூக்களின் வாசம் கிச்சனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.மல்லிகை, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூக்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
இது தவிர நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரியும் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத் தோல் மூலம் கிச்சனை வாசனை மிகுந்த ஒன்றாக மாற்ற முடியும். எலும்பிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை நீரில் போட்டுக் கொதிக்க விடவும். அதில் இலவங்கப்பட்டை தூளை அதில் சேர்த்து நீர் ஆறியதும் அதை கிட்சன் முழுவது ஸ்ப்ரே செய்தால் துர்நாற்றம் குறைந்து, நல்ல வாசனை இருக்கும்.
கிச்சனில் இருக்கும் காய்கறி வெட்டும் பலகையில் இருந்தும் கூட மோசமான ஸ்மெல் வரும். இதைத் தடுக்க எலுமிச்சையில் உப்பைத் தடவி அதை பலகையில் தேய்க்க வேண்டும். இதன் மூலமும் கிச்சன் துர்நாற்றத்தை நீக்க முடியும். இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டெப்களை பின்பற்றுவதன் மூலம் கிச்சனை எப்போதும் வாசனை மிகுந்ததாக வைத்துக் கொள்ளலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications