20 வருட வீட்டுக் கடனை 10 ஆண்டுகளில் அடைப்பது எப்படி? சுலபமான ஸ்மார்ட் கணக்கு
சென்னை: 20 ஆண்டு வீட்டுக் கடனை சில டிரிக்ஸை ஆரம்பம் முதலே பின்பற்றினால் 10 ஆண்டுகளில் அடைக்க முடியும். சிறப்பான நிதி நிர்வாகத்தை உங்களால் கடைபிடிக்க முடியும். புத்திசாலித்தனமாக செயல்படுவது குறித்து சிந்தித்தாலே போதும். பல லட்சம் வட்டி செலவுகளை உங்களால் மிச்சப்படுத்த முடியும். விரைவில் கடன் இல்லாத வாழ்க்கையை அடைய பொருளாதார நிபுணர்கள் கூறிய தகவல்கள் சிலவற்றை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பலர் வீட்டுக்கடனை வாங்கி கொண்டு அடைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். 10 அல்லது 15 வருடங்கள் கழித்து போய் கடனை அடைக்க வங்கிகளை போய் நாடுகிறார்கள். அங்கு போனால் தான் உண்மை தெரியும். வட்டி தான் இத்தனை வருடங்களாக கட்டியிருப்பார்கள். அசலில் பெரும் தொகை அப்படியே தான் இருக்கும். அப்போது அவர்கள் கடனை அதிக பணத்தை கட்டிவிடலாம் என்றால், எந்த பலனும் இருப்பது இல்லை. இறுதியாக அவர்கள் முழு தொகையையும் கட்ட வேண்டியுள்ளது.

கடனை அடைக்க வழிகள்
ஆனால் அதேநேரம் உங்கள் மாதாந்திர இஎம்ஐ தொகையைவிட முடிந்தபோதெல்லாம் கூடுதல் தொகையை கடன் வாங்கிய முதல் ஆண்டில் இருந்தே செலுத்தலாம். போனஸ், ஆண்டு ஊதிய உயர்வு அல்லது எதிர்பாராத வருமானம் போன்றவற்றை கடனை அடைக்க
இஎம்ஐ தொகையை அதிகரிப்பது போன்றவை கடனை விரைவாக அடைக்க உதவும். அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் இஎம்ஐ தொகையை 5% முதல் 10% வரை அதிகரிப்பது கடனை விரைவாக அடைக்க உதவும். ஒரு சிறிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதும் கடனை அடைக்க பெரிய உதவியாக இருக்கும்.
பகுதி முன்பணம் (Part Prepayment) செலுத்துதல்
உங்கள் கடனின் ஒரு பகுதியை அவ்வப்போது செலுத்துவதன் மூலம் அசல் தொகையைக் குறைக்க முடியும். அதாவது வங்கிகள் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த அனுமதிக்கின்றன. இந்த தொகையை செலுத்தினால், உங்கள் வட்டிச் செலவை கணிசமாகக் குறைக்கும். அதேநேரம் இப்படி முன்கூட்டியே கடன் தொகையை செலுத்தும் முன்பு கட்டணமும் சில நேரம் வங்கிகள் வசூலிக்கக்கூடும். அதற்கு உங்கள் கடன் ஒப்பந்தத்தை பாருங்கள்.
மற்றொரு வங்கிக்கு மாற்றுவது (Balance Transfer)
அதேபோல் உங்கள் தற்போதைய வட்டி விகிதத்தைவிட குறைவான வட்டி விகிதத்தில் மற்றொரு வங்கி வீட்டுக் கடன் வழங்கினால், உங்கள் கடனை அந்த வங்கிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பிராசசிங் பீஸ் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு தனியார் வங்கிகள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் 9 சதவீதம் வரை கூட வட்டி இருக்கும். ஆனால் எல்ஐசி, எஸ்பிஐ போன்றவை 7.50 சதவீதம் முதல் 8 சதவீதம் அளவிற்கு கடன் தருகின்றன.. எனவே எல்ஐசி, எஸ்பிஐயில் மாற்றினால் கணிசமான வட்டி குறையும். இதன் மூலம் உங்கள் மாதாந்திர EMI-ஐ குறைக்க முடியும். அந்த கூடுதல் தொகையைச் சேமித்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை செலுத்தி வட்டியை குறைக்கலாம்.
20 ஆண்டு கடனை முன்கூட்டியே அடைக்க கணக்கீடு
உதாரணமாக, நீங்கள் எஸ்பிஐ அல்லது எல்ஐசியில் ரூ. 50 லட்சம் கடனை 8% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் எடுத்திருந்தால், உங்கள் மாதாந்திர EMI சுமார் ரூ. 41,822 ஆக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ. 5,000 செலுத்தினால், கடனை 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 14 வருடங்களில் அடைத்துவிடமுடியும். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு EMI தொகையைச் செலுத்தினால், கடனை 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 17 வருடங்களில் அடைத்துவிட முடியும், அதேபோல் நீங்கள் ₹36,48,000 வீட்டுக் கடனை 8% வட்டி விகிதத்தில் 20 வருடங்களுக்கு எடுத்துள்ளீர்கள்.. உங்கள் EMI ₹30,500 ஆக உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
10 வருடங்களில் அடைப்பது எப்படி
நீங்கள் ஒவ்வொரு மாதமும 15 ஆயிரம் சேமித்து, ஆண்டுக்கு ஒருமுறை 1.80 லட்சம் செலுத்தினால் கடன் 10 வருடங்களிலேயே அடைந்துவிடும். அதேநேரம் சரியான கணக்கீடு அறிய வங்கியினை நாட வேண்டும். வட்டி விகிதம் குறைந்தால் அல்லது ஏறினால், இந்த வித்தியாசம் சற்று மாறுபடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள், முதல் மாதம் முதலே முடிந்தவரை சேமித்து கட்ட தொடங்கினால் கண்டிப்பாக கடனை விரைவாக அடைக்கலாம். கடைசி 5 வருடங்களில் போய் அடைக்க நினைத்தால் பெரிய தொகையை கட்ட வேண்டியதிருக்கும். அது வீண் வேலையாக போய்விடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications