செல்போன் வெடித்து கை, முகம் சிதைந்து பலியான 8 வயது சிறுமி! ஸ்மார்ட்போன் என்ன காரணத்தால் வெடிக்கும்?
சென்னை: செல்போனில் கேம் விளையாடிய போது போன் வெடித்து சிதறி 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இது போன்ற விஷயங்களை எப்படி தவிர்க்கலாம் என பார்ப்போம்.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கூட செல்போனில் பாட்டு, ரைம்ஸ் ஆகியவற்றை வைத்து விட்டால் அழும் குழந்தையும் அமைதியாகிவிடுகிறது என பெற்றோர் நம்புகிறார்கள். அது போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் குழந்தைகளின் தனிமையை போக்க ஆன்ட்ராய்டு செல்போனை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள்.

பள்ளி முடிந்து வந்ததும் அது பாட்டுக்கு ஏதாவது தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பின்னர் செல்போனை பார்க்க ஆரம்பித்தால் வீட்டிற்கு யார் வந்தாலும் தெரியாத அளவிற்கு குழந்தைகள் அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய ஞாபக சக்தி குறைகிறது. கவனமும் சிதறுகிறது.
பொதுவாக செல்போன்களை அதிக நேரம் பார்க்கும் சிறுவர்கள், கேம் விளையாடும் சிறுவர்கள் அதிலேயே கவனம் செலுத்துவதால் படிப்பின் மீது அவர்களால் ஈடுபாடு காட்ட முடியவில்லை. படித்து முடித்துவிட்டால் செல்போன் தருவார்கள் என்பதால் எட்டும் எட்டாமல் எதையோ படித்துவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் செல்போன் பார்க்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் விபத்துகளும் நேரிடுகின்றன.
அப்படி 8 வயது சிறுமி பயன்படுத்திய செல்போன் விழுந்து அவர் இறந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யஸ்ரீ. 8 வயது சிறுமி நேற்று முன் தினம் இரவு 10.30 மணி அளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சோக சம்பவம் நடந்த நிலையில் இது போன்ற விஷயங்களை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
செல்போன் பேட்டரி எப்போது செயலிழக்கிறதோ அப்போதே அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். மேலும் நீண்ட நேரம் குழந்தைகளிடம் செல்போனை கொடுக்க வேண்டாம் என்கிறார்கள். பேட்டரி பழுதாகிவிட்டால் அதாவது வீங்கிவிட்டால் செல்போனில் பேக் டோர் ஆட்டோமேட்டிக்காக ஓபனாகிவிடும். அதையும் கவனிக்காவிட்டால் டிஸ்பிளே உடையும் வாய்ப்பிருக்கிறது.
இப்போது வரும் செல்போன்களில் பேட்டரி இம்பிள்ட்டாகவே வருகிறது. அதனால் அது வீங்குவது தெரிவதில்லை. இரவு நேரங்களில் சார்ஜ் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் தவறை செய்யவே கூடாது. பேட்டரி பல்ஜாவதால்தான் பேட்டரிகளும் வெடிக்கின்றன. இப்போது வரும் சார்ஜர்களும் ஹெவியாக இருக்கிறது. பேட்டரியின் திறனும் அதிகமாக இருக்கிறது. நீண்ட நேரம் சார்ஜ் ஆகும் போது லித்தியம் அயன் பேட்டரி வெப்பமடைந்து செல்போன் வெடிக்கும்.
சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். அவசரமாக பேச வேண்டும் என்றால் சார்ஜ் செய்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும். செல்போன் நிறுவனம் வழங்கும் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். நீண்ட நேரம் சார்ஜ் போடாதீர்கள், இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள். அது போல் அதிகாரப்பூர்வ செல்போன் சேவை மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுக்காதீர்கள். சார்ஜ் போடும் போது அதிக வெப்பமடைந்திருந்தாலும் செல்போன் பழுதடைந்திருந்தாலும் அதை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications