Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருசத்துக்கு 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டுக்கு 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாம் வருமான வரியை சேமிக்க முடியும் என்கிறார்கள். அதற்கான சரியான வழிமுறைகள் பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறியதை இப்போது பார்ப்போம்.

மாத சம்பளம் வாங்குவோர் சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்யாமல் போனால் வருமான வரி அதிக அளவில் கட்ட வேண்டியது வரும். வருமான வரி என்பது பழைய திட்டத்தின் படி ஐந்து லட்சத்திற்கு மேலும் புதிய திட்டத்தின்படி 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேலும் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரிகளை மாதம் மாதம் உங்கள் சம்பளத்தில் நிறுவனங்கள் பிடித்து வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் அரசு சொல்வது படி, சேமிப்பு, மருத்துவம் உள்ளிடடவற்றில் கட்டினால உங்களுக்கு பிடிக்கப்பட்ட வருமான வரியை திரும்ப பெறலாம்.

How to save 100 percent income tax for people with annual income of Rs 12 lakhs? expert calculation

புதிய வருமான வரி முறையில் பெரியதாக சலுகைகள் இல்லை.. நேரடியாக வரியை கட்ட வேண்டியது அவசியம் ஆகும். சுமார் 7 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய வரம் ஆகும். அதேநேரம் பழைய வரிமுறையில் பல நன்மைகள் உள்ளது. பழைய வரிமுறையினை தேர்வு செய்தால் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.. எப்படி என்பதை பார்ப்போம்.

நீங்கள் வருமான வரி தாக்கல் செய்பவர் என்றால் கண்டிப்பாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் பழைய வரி முறை மூலமாக மட்டுமே நீங்கள் வருமான வரியை கிளைம் செய்து சேமிக்க முடியும். புதிய வரிமுறைகளில் அதற்கு வாய்ப்பு இல்லை.

12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி சேமிப்புக்கு தயாராகுறீங்க அப்படீன்னா, இதை எல்லாம் நோட் பண்ணிக்கங்க.. என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கணிசமான பணத்தை முதலீடு செய்ய வேண்டும் அதேபோல் உங்களது வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் படி வருமான வரிக்கழிவுகளை கிளைம் செய்ய வேண்டும்.பழைய வரிமுறையை தேர்வு செய்யக்கூடிய மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பொதுவான வரிக்கழிவுகள் பட்டியலை இப்போது பார்ப்போம்.

பொதுவாக வருமான வரி செல்லுத்துவோருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் 50,000 ரூபாய் நிரந்தமாக கழிக்கப்படும். அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் பிரிவு 80C யின் கீழ் ஹவுஸிங் லோன், குழந்தைகளின் கல்வி கட்டணம், எல்ஐசி, போஸ்ட் ஆபிஸ் திட்ட முதலீடுகள், பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் உள்பட அனைத்து சேமிப்புகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையில் கிளைம் செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80CCD (1B) -இன் கீழ் மத்திய அரசின் நேஷனல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் ரூ.50,000 ரூபாய் கிளைம் செய்ய முடியும். அடுத்ததாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80D -இன் கீழ் உங்களுக்கோ, உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக செலுத்திய பேமெண்ட்களுக்கு 25,000 ரூபாய் வரை கிளைம் செய்து கொள்ளலாம். அதேநேரம் உங்கள் வயதான பெற்றோர்களுக்கு பெற்றோர்களின் மெடிக்கல் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக செலுத்திய பேமெண்ட்க்கு 50,000 வரையில் கிளைம் அனுமதிக்கப்படுகிறது.

அடுத்ததாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 24(b) இன் கீழ் வீட்டு கடனுக்கான வட்டிக்கு 2,00,000 ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு கிளைம் செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு. மேற்கண்ட விஷயங்களில் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இன்னும் சரியாக விளக்குவது என்றால், லீவ் டிராவல் அலவன்ஸ், டெலிபோன் பில் ரீஇம்பர்ஸ்மெண்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் போன்றவற்றில் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.

அதோடு அரசே ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்களாக 50000 வரை தருவதால், மொத்தமாக மேற்கண்ட எல்லா முதலீடுகள் மூலம் வருமானத்தை 5 லட்ச ரூபாய்க்கு கீழ் குறைவாக நீங்கள் காட்ட வேண்டும். மேலே சொன்னபடி சரியாக செய்தால் உங்களது வருமானம் 4,96,500 ரூபாயாக இருக்கும். இப்போது நீங்கள் இந்த வருமானத்திற்கு எந்த ஒரு வரியையும் செலுத்த தேவையில்லாமல் போகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். முழு தகவல்கள் மற்றும் ஆலோசனைக்கு ஆடிட்டர்களை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் நல்ல அறிவுரையை உங்களுக்கு வழங்குவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+