சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்டோ ஏசி கூட ஓகே.. அந்த ஒரு ஏசி இருக்கே.. அதுதான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் வெயில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது.. மற்றொரு பக்கம், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், ஏசி பயன்பாடும் கிடுகிடுவென கூடிக் கொண்டே செல்கிறது.

Recommended Video

    அந்த ஒரு ஏசி தான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ்

    கரெண்ட் பில் அதிகமாக வந்தால் கூட பரவாயில்லை, என்று பல்லைக் கடித்துக் கொண்டு, மக்களும் எந்த நேரமும் ஏசி ரிமோட்டும் கையுமாகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கும் ஒரு அச்சுறுத்தலை முன் வைக்கிறது கொரோனா வைரஸ்.

    ஏசி வசதி செய்யப்பட்ட இடங்களில், கொரோனா வைரஸ், பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறது சில ஆய்வுகள். மற்றொரு பக்கம், வெப்பம் அதிகமாக இருந்தால், கொரோனா பரவல் குறைந்துவிடும் என்கிறது அமெரிக்க ஆய்வு. ஆக இரு வகை ஆய்வுகளும் சொல்வது ஒன்றுதான். ஏசியை ஆஃப் பண்ணுங்க என்பது.

    கொரோனா பிரச்சினைக்கு பிறகு, கிடுகிடுவென உயரும் மோடி செல்வாக்கு.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்கொரோனா பிரச்சினைக்கு பிறகு, கிடுகிடுவென உயரும் மோடி செல்வாக்கு.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்

    அரசு அட்வைஸ்

    அரசு அட்வைஸ்

    ஆனால், நிலைமை அப்படியா இருக்கிறது. ஏசியோ, ஏர் கூலரோ இல்லாமல், வாழக் கூடிய சூழ்நிலையா இப்போது நிலவுகிறது. அதனால்தான், மத்திய அரசு, சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை ஃபாலோ செய்தால், பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம். வீட்டிலுள்ள ஏர் கண்டிஷனர்கள் 24-30 டிகிரி செல்சியஸுக்கு இடையில் இயங்க வைக்கப்பட வேண்டும். ஈரப்பதம் 40-70 சதவிகிதம் வரை இருக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஏசியை பயன்படுத்தினாலும், பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் மக்களே.

    இயற்கை காற்று தேவை

    இயற்கை காற்று தேவை

    ஏசிகளை பயன்படுத்தும்போது, ஜன்னல், கதவு என எல்லாவற்றையும் மூடி வைத்திருப்போம். அப்படி செய்ய கூடாது. ஜன்னல்களை சற்று திறந்த நிலையில் வைக்கலாம். இயற்கை காற்று, உள்ளே வர வேண்டும். உள்ளே சுற்றும் காற்று வெளியே போக வேண்டும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

    அறைகள் நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டுமாம். எனவே அறைகளின் கதவுகளை பூட்டிவிடாதீர்கள். காற்று வெளியேற்றும் விசிறி ( exhaust fan) ஏசி வசதி கொண்ட அறையில் இருந்தால், அது ரொம்பவே சூப்பர். பிரச்சினையே கிடையாதாம்.

    ஏர் கூலர் பயன்பாடு

    ஏர் கூலர் பயன்பாடு

    ஏசிதான் என்றில்லை, ஏர் கூலர்களை பயன்படுத்தி வெப்பத்தை குறைத்துக் கொள்வது கொஞ்சம் நல்ல ஐடியா என்கிறது மத்திய அரசின் அட்வைஸ். அதேநேரம், இந்த குளிரூட்டிகளில் உள்ள ஏர் ஃபில்டர்களில் தூசி நன்கு அகற்றப்பட்டு, சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்த, உங்கள் ஏர்கூலர் வெளியில் இருந்து காற்றை உள்ளே இழுக்கும் வகையில் ஒரு இடத்தில் வைக்கப்பட வேண்டும். ஈரப்பதத்தைக் குறைக்க ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    ஆபீஸ் ஏசி மோசம்

    ஆபீஸ் ஏசி மோசம்

    ஏசி அல்லது ஏர் கூலர் என்று இல்லை. மின் விசிறி பயன்பாட்டிலும் சில எச்சரிக்கை அம்சங்கள் தேவைப்படுகிறது. நல்ல காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும், மற்றும் exhaust fan இருந்தால் அதையும் பயன்படுத்தலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் விண்டோ ஏர் கண்டிஷனர்கள் கூட ஆபத்து குறைவானவைதானாம். ஆனால், சென்ட்ரலைஸ்ட் ஏசி என்று சொல்கிறோமே, அலுவலகங்களில் பயன்படுத்துவார்களே, அதுதான் ரொம்ப டேஞ்சராம்.

    ஜன்னலை திறந்து வையுங்கள்

    ஜன்னலை திறந்து வையுங்கள்

    மால்கள், கார்ப்பரேட் மற்றும் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இப்படியான ஏசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒரு நபருக்கு பாதிப்பு இருந்தாலும், அந்த கட்டிடத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனாவை பரப்ப இதுபோன்ற ஏசிகள் முக்கிய பங்கு வகிக்குமாம். எனவே தவிர்க்க முடியாத காரணத்தால் இதுபோன்ற ஏசி பயன்பாட்டை பயன்படுத்த வேண்டியிருந்தால், வெளிப்புற காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டியது அவசியம் என்று, திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. எனவே மக்களே.. எந்த மாதிரி ஏசி பயன்படுத்துகிறீர்களோ, அந்த மாதிரியான முன்னெச்சரிக்கையை நீங்கள் எடுத்துக்கொள்ள, இந்த தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறோம்.

    English summary
    The union government has issued guidelines to shed light on the ideal temperature to operate air conditioners.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X