புதிய உச்சத்தை தொடப்போகும் சம்பளம்.. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. மோடியின் சரவெடி
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு எச்ஆர்ஏ உயர்வு 3 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். ஆனால் இந்த முறை தேர்தலை மனதில் வைத்து அதற்கு முன்பே அகவிலைப்படி உயர்த்தப்படும் என்கிறார்கள்.
2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அகவிலைப்படி எவ்வளவு : இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.ஜூலை முதல் வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.

இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது.இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.
ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் தற்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல்தான் இந்த மாதத்திற்கான புள்ளிகள் வர வேண்டும். அதை வைத்தே அகவிலைப்படி உயர்வு இருக்கும்.
பெரும்பாலும் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 42 சதவிகிதம் அகவிலைப்படி வாங்குபவர்கள் இனி 46 சதவிகிதம் வாங்குவார்கள். ஜூலை முதல் வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.;












Click it and Unblock the Notifications