ரேஷனில் வருகிறது மாற்றம்.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு.. "அதை தராதீங்க" .. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. என்ன அது?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

மேலும், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில், கருவிழி சரிபார்ப்பு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் சொல்கிறார்கள். அதேபோல, பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யையும் வழங்கபோவதாக கூறுகிறார்கள்.
வசதிகள்: இப்படி எண்ணற்ற அதிரடிகளை பொதுமக்களின் நன்மைக்காக தமிழக அரசு செய்து வரும்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களின் வசதியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக, ரேஷன் பொருட்களை எல்லாம், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளுக்கு, மாத இறுதியில் அனுப்பிவைக்கப்படுவது வழக்கமாகும்.. பிறகு, அங்கிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பெரிய கூட்டுறவு சங்கங்கள், லாரிகளில் சுமை தூக்கும் ஊழியர்களுடன் பொருட்களை ஏற்றி, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு பிறகே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அப்பொருட்கள் விநியோகிக்கப்படும்.
உணவுப்பொருட்கள்: ஆனால், இந்த ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கி வைக்கும்போது, சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணம் கேட்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு முழு லோடுக்கு, 700 ரூபாயும், பாதி லோடுக்கு, 400 ரூபாயும் கேட்கிறார்களாம்.. அப்படி பணத்தை தரவில்லையானால், இறக்கி வைக்க தாமதம் செய்கிறார்களாம்.. மேலும், எடை குறைவாக பொருட்களை தந்துவிடுகிறார்களாம்.
இதனால், வேறு வழியின்றி ரேஷன் ஊழியர்களும், தங்களது சொந்த பணத்திலிருந்து, கூலியை தந்து வந்தாலும், செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்ற புலம்பல்கள் வெடித்துள்ளன. அதனால்தான், இனிமேல், சுமை தூக்கும் ஊழியர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள், தங்களது ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வழங்கியிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு, லாரியில் அனுப்பப்படும் பொருட்களை இறக்குவதற்காக, சுமை துாக்கும் ஊழியர்களுக்கு இறக்கு கூலி வழங்க வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications