"கிளம்பி வாங்க".. 25 எம்எல்ஏக்களாமே.. இது எடப்பாடிக்கு தெரியுமா.. "அக்கா" ஆட்டம் ஆரம்பம்.. போச்சுடா
சசிகலாவின் அரசியல் அதிரடி குறித்த இன்னொரு தகவல் வட்டமடித்து வருகிறது
சென்னை: சசிகலா மெகா அஸ்திரம் ஒன்றை விரைவில் கையில் எடுக்க போகிறாராம்.. இது எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கும் வகையில் இருக்கலாம் என்கிறார்கள்.. அதற்கான வேலைகள் சைலண்ட்டாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.
அதிமுக விவகாரங்கள் உச்சத்துக்கு போய்விட்ட நிலையில், இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.. நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையே இரு தரப்பும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமியை தவிர, கோர்ட் முடிவைதான் பாஜகவும் எதிர்நோக்கி உள்ளது.. ஆனால், இதற்கு நடுவில் சசிகலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தற்போது ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

வைத்திலிங்கம்
முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் விகே சசிகலா... வாரத்துக்கு இருமுறை சசிகலாவிடம் பேசும் ஓபிஎஸ், அதை நிறுத்திக் கொண்டார். கடந்த 15 நாட்களில் ஒருமுறை கூட அவர் சசிகலாவிடம் பேசவில்லையாம். அதேபோல, வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும் சசிகலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். இதனால், சசிகலா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில்தான் இருக்கிறாராம். அவருக்கு தற்போது ஒரே ஒரு ஆறுதல், அவரது சகோதரர் திவாகரன் தினமும் இரவு 10 மணிக்கு பேசுவதுதான்.

25 MLAs
அப்போது தன்னுடைய அக்கா சசிகலாவுக்கு அரசியல் அப்-டேட்டுகளையும், எந்த மாதிரி அரசியல் செய்ய வேண்டும் என்பதையும் பற்றி க்ளாஸ் எடுக்கிறாராம். அண்மையில், ஒருநாள் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் போது, "அதிமுக எம்எல்ஏக்கள் பலர் என்னிடம் பேசுகிறார்கள் அக்கா. பல விஷயங்கள் பேசுகின்றனர்... குறிப்பாக எடப்பாடி-ஓபிஎஸ் மோதலால் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ என்கிற கவலை அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது. அதிமுகவிலிருந்து 25 எம்எல்ஏக்களை சின்னம்மா தன் பக்கம் இழுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சின்னாம்மாவின் அரசியல் பரபரப்பாகும். இந்த திடீர் சம்பவம் நடக்காமல் அதிமுகவுக்குள் சின்னாம்மா வருவது நடக்காது.

அக்கா அக்கா
எடப்பாடி பழனிசாமி மிக ஸ்ட்ராங்காக சில விஷயங்களை செய்து வைத்திருக்கிறார். ஓபிஎஸ், இபிஎஸ் மீது அதிருப்தியுள்ள அதிமுகவினர் சின்னம்மா பக்கமோ பாஜக பக்கமோ போகாமல், திமுக பக்கம் போகிறார்கள். திமுக, இதனை ஒரு பெரிய அசைன்மெண்ட்டாகவே செய்து வருகிறது. இப்படியே போனால் அது சின்னம்மாவின் எதிர்கால அரசியலுக்கு கூட எதிராகப் போகும். அதனால், 25 எம்எல்ஏக்களை சின்னம்மாவின் ஆதரவாளராக அவர் பக்கம் இழுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அக்கா... இது, எல்லாவகையிலும் சரியானதாகவே தெரிகிறது" என்று திவாகரன் சொன்னாராம்.

திவாகரன்
அதற்கு சசிகலா, "நீ சொல்றது சரிதான். என்னை நம்பி அவர்கள் வரட்டுமே, நானா வேண்டாம் என்கிறேன்... எம்எல்ஏக்களிடம் நீ பேசி அவர்களை என்னை வந்து சந்திக்க சொல்... எல்லாரும் இல்லைன்னாலும் உன் கிட்டே பேசும் போது ஆதங்கப்பட்டாங்க இல்லையா... அந்த எம்எல்ஏக்களையாவது முதலில் வரச் சொல்" என்று சசிகலா பதில் சொன்னாராம்.. அதற்கு திவாகரன், "அவர்கள் வரத் தயார். ஆனால், பொருளாதாரம் சார்ந்த சில எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருக்கு. அதை சரி செய்தால் உடனே நம்ம பக்கம் வந்துவிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

டெய்லி செலவு
ஆனால், சசிகலாவோ, "சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளதே.. தினசரி செலவுக்கே நான் தள்ளாடுவது உனக்கே தெரியும்.. இந்த சூழலில், அவர்களின் பொருளாதார சிக்கலை சரி செய்ய நான் எப்படி உதவ முடியும்? என்றெல்லாம் சொல்லி, பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க இயலாத சூழலை வெளிப்படுத்தினாராம் சசிகலா. அவரது தரப்பில் இப்போதைதக்கு உலாவும் ஹை-லைட் இதுதான் என்கிறார்கள் சசிகலா முகாம் வட்டாரத்தினர்...

வரேன் இருங்க
கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடியின் பிடிவாதத்தால் அதிமுக பலகீனமாக மாறி வருகிறதே என்று புலம்பி வருகிறார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஒரு கனமான தொகையை கொடுத்தால் சசிகலா பக்கம் வந்து விடுவார்கள்.. அந்த மனநிலையில் கிட்டத்தட்ட 30 எம்எல்ஏக்கள் இருப்பதாகவே திவாகரனிடம் சொல்லப்பட்டுள்ளது... எடப்பாடி பழனிசாமிக்கு இப்போதுவரை பலமாக இருப்பது அவர் பக்கமுள்ள நிர்வாகிகள்தான் என்பதால், அதை உடைக்கவே இப்படியொரு அஸ்திரம் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.. எனவே, ஏதாவது ஒரு முயற்சி எடுத்து, சம்பந்தப்பட்ட 25 எம்எல்ஏக்களை சசிகலா தன் பக்கம் கொண்டுவந்துவிடுவாரா? என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications