Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சங்கராச்சாரியார்".. ஹிந்துவா? பிராமணரும், சமஸ்கிருதமும் தான் முக்கியமா..சித்தர் மூங்கிலடியார் நறுக்

சித்தர் மூங்கிலடியார் தந்தை பெரியார் கொள்கைகள் குறித்து பேசி பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியாரின் கொள்கையை இளைய சமுதாயம் இன்னும் ஆழமாக படிக்க வேண்டும், அவரது கருத்துக்களை பரவவிடாமல் தடுத்துவிட்டனர் என்று சித்தர் மூங்கிலடியார் தெரிவித்துள்ளார்.

வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் சித்தர் மூங்கிலடியாரை ஒன் இந்தியா தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம்.. அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தோம்.. குறிப்பாக, நான்கு மதம் உள்ளனவா? தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் உண்மையா? இந்து மதம் என்பது என்ன? 4 வர்ணங்கள் என்பது என்ன? என்பது குறித்து சந்தேகங்களை எழுப்பினோம்..

அதுபோல, இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன் என்று எம்பி ஆ ராசா சொல்லி உள்ளாரே, இந்து மக்களுக்கு எதிராக ராசா செயல்படுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறதே.. இது உண்மையா? என்றும் கேள்விகளை முன்வைத்தோம்.. அவர் நம்மிடம் சொன்னதாவது:

ஹிந்தி

ஹிந்தி

இந்தியா என்று வெள்ளைக்காரன் பேர் வைக்கல.. வெள்ளைக்காரன் காலத்துக்கு பிறகுதான் ஹிந்துஸ்தான் என்று பெயர் வைக்கிறார்கள்.. அவர்கள் சொல்லும் மதம் ஹிந்து.. நாம சொல்வது இந்து மதம்.. ஹிந்து வேற, இந்து வேற... ஆ.ராசா சொல்வது இந்த ஹிந்து மதத்தைத்தான்.. பிற மண்ணினரான பிராமணர்கள் ஒரு குற்றத்தை செய்தால், அதற்கு யாருமே தண்டனை கொடுக்க முடியாது, ஆனால், அதே குற்றத்தை கீழ்வர்ணத்தில் உள்ளவர்கள் செய்தால், உடனே மரண தண்டனை தந்துவிட வேண்டும், யாராவது சமஸ்கிருத பாடங்களை ஓரமாக நின்று கேட்டால் உடனே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும், அதை பார்த்தால் அவர்களின் கண்ணை குருடாக்கிவிட்டுடுங்க இப்படியெல்லாம் சொல்வதுதான் ஹிந்து மதம்.

 சங்கராச்சாரியார்

சங்கராச்சாரியார்

காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னது இதைதான்.. இதுக்கு பேரு சனாதன தர்மம். இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. இதற்கு 2 அடிப்படை உண்டு.. கடவுளை பார்க்க முடியாது, அப்படி பார்த்தவர்கள் எங்குமே கிடையாது என்பதுதான் சமஸ்கிருதம்.. நான் கடவுளை பார்த்தேன் என்று ஆதிசங்கரர் கூட எங்கேயும் சொல்லவில்லை.. ஆனால், கலிகாலத்தில் குறைந்தது 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், சித்தர்கள் ஆகியோர் கடவுளை பார்த்ததாக உண்டு.. எந்த கோயிலில், எந்த கடவுளை, எந்த மாதத்தில், எந்த தேதியில், எந்த திதியில் இன்றும் வரலாறு இருக்கின்றன..

 63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

அந்த 63 நாயன்மார்களும் சிவனை பார்த்தவர்கள்.. இத்தனைக்கும் இந்த 63 பேரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள்.. சாதி இல்லை என்பதற்கு இதுதான் உதாரணம்.. நடைமுறை நிரூபணம் இது.. இந்து மதத்தை நாங்கள்தான் தூக்கி பிடிக்கிறோம், அதற்காகவே இருக்கிறோம் என்று சொல்லி கொள்ளும் இந்து அமைப்புகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், மக்களிடம் சொல்ல வேண்டியது இது ஒன்றுதான்.. சாதி வர்ணம் இல்லைன்னு சொல்லிடுங்க பார்க்கலாம்.. எல்லா கோயில்களிலும் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்.. இதை சொல்லிவிட்டீங்கள் என்றால், இந்து என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.. ஆனால், இதை நிச்சயம் சொல்ல மாட்டார்கள்.. காரணம், வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.. ஆர்எஸ்எஸ் அனுதாபிதான் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்...

 மடாதிபதிகள்

மடாதிபதிகள்

சைவத்தில் நிறைய மடாதிகள் உண்டு.. இவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் எங்களுக்கு இரண்டு கண்கள் என்பார்கள்.. ஆனால் சமஸ்கிருதத்தை கருவறைக்குள் ஓதவிடுவார்கள்.. ஆனால், தமிழ் மட்டும் ஓதுவார் கருவறைக்கு வெளியே நிற்க வைப்பார்கள்.. இதுதான் நடைமுறையில் உள்ளது.. சமஸ்கிருதத்தில் ஏராளமான பொய்களும், புரளிகளும் புகுந்துவிட்டன.. சமமாக செய்யப்பட்டது என்பதே சமஸ்கிருதம் என்று பொருள்.. ஆ.ராசா பேசிய பேச்சுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.. அதாவது, மனுநீதியில் இப்படி சொல்லியிருப்பதாக தாராளமாக எடுத்து சொல்லுங்கள் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு.. ஆனால், நீ இந்துவாக இருப்பதால் தாழ்வானவன் என்று இந்துவை பார்த்து சொல்லாதீர்கள்.. அதற்கு எங்கள் ஆதரவு இல்லை.. இந்து என்று நீங்களும் முத்திரை குத்தும்போது, சனாதனம் சொல்வதை வழிமொழிகிறீர்கள் என்றே அர்த்தம்.

 ஆலயம்

ஆலயம்

பெரியார் சிலைக்கு கீழே நிறைய வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள்.. உண்மையாக இந்த சொற்கள் மூலம் பெரியார் என்ன சொல்ல வருகிறார் என்றால், சாதி வேற்றுமையையும், மனிதனுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஆதரிக்கும் என்றால் அந்த வேதத்தை நான் எதிர்ப்பேன் என்றார்.. ஒருவேளை வேதத்தை சொன்னவர் கடவுள்தான் என்றால், அந்த கடவுளையும் எதிர்ப்பேன் என்றார்.. அந்த காலத்தில் ஆலயத்துக்குள் நுழையவே முடியாத நிலையில், இதுபோன்ற வாசகங்கள் அன்று தேவையாக இருந்தது..

 சுயமரியாதை + விடுதலை

சுயமரியாதை + விடுதலை

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்பதை அந்த காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.. சாதி வேற்றுமையை எதிர்த்தார், சுயமரியாதையை வளர்த்தார், பெண்ணடிமையை எதிர்த்தார் என்ற இந்த 3 முக்கிய கருத்துக்களும் இளைய சமுதாயத்துக்கு தெரியவேயில்லை.. இதைதான் கொண்டு செல்ல வேண்டும்.. பெரியாரை அவர் காலத்திலும் சரி, அவர் காலத்துக்கும் பிறகும் சரி, அவரை யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை.. கடவுள் மறுப்பாளராக அவரை பார்க்கிறார்களே தவிர, சுயமரியாதை + பெண் விடுதலை + சாதி வேற்றுமையை தன்னுடைய 95 வயது வரை எதிர்த்து கொண்டிருந்தவர் என்பது பரவவேயில்லை.. இது பெரியாருக்கு கிடைத்த அவமரியாதை..

 2 பக்க நியாயங்கள்

2 பக்க நியாயங்கள்

சாமியை கும்பிடு என்று பெரியார் சொன்னார்.. ஆனால், அவன் காலில் ஏன் விழுகிறாய் என்றும் பெரியார் கேட்டார்.. இப்படி இரண்டையுமே வெளிப்படுத்துங்கள்.. கோயிலுக்குள் நுழைய விடு என்றார்.. ஆனால், நுழைய விடாவிட்டால் சிலையை உடைப்பேன் என்றார்.. இப்படி 2 பக்க நியாயங்களையும் சொல்லாமல், ஒருபக்கத்தை மட்டுமே வெளிப்படுத்தி அவர் சொல்ல வந்த விஷயத்தையே தடுத்துவிட்டார்கள்.. அதனால், இப்போதுள்ள மக்கள் ஒன்றை மட்டும் கேட்க வேண்டும், அன்னைக்கு கோயிலுக்குள் என்னை உள்ளே விடாமல் தடுத்தாய், இன்று கருவறைக்குள் நுழைய விடாமல் தடுக்கிறாய், நீ எப்படி இந்து மதத்தை தாங்குவாய்? அப்படி என்றால், பிராமணரும், சமஸ்கிருதமும் தான் முக்கியமா என்று அவர்களை பார்த்து கேட்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+