Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை வீரன் பாட்டு பாடாதது எனக்கு வருத்தமே இல்லைங்க.. அதிதி சூப்பர்ங்க திட்டாதீங்க - ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருமன் படத்தில் வரும் மதுரை வீரன் பாடலை அதிதி சங்கர் நன்றாகவே பாடியிருப்பதாக ராஜலட்சுமி கூறியுள்ளார். எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா உடன் மேடையில் மதுரை வீரன் அழகுல பாடலை பாடினார் அதிதி சங்கர். விழாவில் பாடலாசியர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தனது வேதனையை சினேகன் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் படக்குழுவின் பிரஸ்மீட்டுக்கு பாடலாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மதுரை வீரன் பாடல்

மதுரை வீரன் பாடல்

இந்நிலையில், யுவன் - அதிதி குரலில் இப்படத்தின் இரண்டாம் பாடலாக வெளியாகியுயுள்ள 'மதுர வீரன் அழகுல' பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி பாடினார். ஆனால், அதிதி குரலில் பாடல் வெளியாகியுள்ளது. சங்கரின் மகள் என்பதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று விமர்சனம் எழுந்தது. நெட்டிசன்கள் பலரும் அதிதியை திட்டினர்.

ராஜலட்சுமி விளக்கம்

ராஜலட்சுமி விளக்கம்

இந்த நிலையில், பாடகி ராஜலட்சுமி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்."எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றியிருக்கலாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது நன்றாக இருந்தது. சரியானவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பதில் சந்தோசமே என்று தெரிவித்துள்ளார். ராஜலட்சுமி.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகி இருந்த நிலையில், சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்திலும் டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள்.

சின்ன மச்சான் பிரபலம்

சின்ன மச்சான் பிரபலம்

இந்த ஜோடியின் சொந்த பாடலான "சின்ன மச்சான்" பாடலை சார்லி சாப்ளின் 2-வில் இருவரும் பாடி அசத்த அதுவும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற "அய்யா சாமி" பாடலை ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து கணவன் - மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றனர்.

தற்போது தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர்.

புஷ்பாவில் சாமி பாடல்

புஷ்பாவில் சாமி பாடல்

புஷ்பா படத்தில் ஹிட் அடித்த சாமி பாடலை ராஜலட்சுமி பாடியிருந்தார். அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இதனையடுத்து ராஜலட்சுமிக்கு பல திரைப்படங்களில் பின்னணி பாட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+