என்னை துடிதுடிக்க வச்சாங்க! சீமானை விடமாட்டேன்! கமிஷ்னரை சந்தித்த விஜயலட்சுமி! ஷாக் வீடியோ
சென்னை: இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்
நடிகை விஜயலட்சுமி.. ஒரு காலத்தில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றார். அந்த படத்திற்கு பின் பெரிதாக இவருக்கு வாய்ப்பு வரவில்லை. அதன்பின் பல்வேறு இணை ரோல்களில் விஜயலட்சுமி நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்தார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
வீடியோ: இது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். அதிலும் அவர் வெளியிட்ட 3 வீடியோக்கள் மக்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. முதலில் சீமானை கடுமையாக ஒருமை வார்த்தைகளில் திட்டி விமர்சனங்களை வைத்தார் விஜயலட்சுமி. அதன்பின் சீமானின் சில வீடியோக்களை வெளியிட்டது விஜயலட்சுமி தரப்பு.
அதன்பின் முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். கடந்த அதிமுக ஆட்சி முழுக்க விஜயலட்சுமி பெங்களூரில் இருந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி விஜயலட்சுமி ஒதுங்கி இருந்தார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வர முடியாது. அவர்கள் சீமானுக்கு பாதுகாப்பு தருகிறார்கள் என்றும் கூறினார். இந்த நிலையில்தான் இன்று சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்து உள்ளார்.
வீடியோ: இந்த புகார் தொடர்பாக பரபரப்பு வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டு உள்ளார். அதில், நான் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுக்க உள்ளேன். உங்களுக்கே தெரியும் அதிமுக ஆட்சியில் அவருக்கு எதிராக நான் புகார் கொடுக்க முடியவில்லை.
என்னை துடிக்க துடிக்க தொல்லை செய்தனர். என்னை தடுத்தனர். மிரட்டினர். எனக்கு எதிராக அதிமுக அரசு உதவியுடன் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனர். மக்கள் எல்லோருக்குமே தெரியும். அதிமுக காலத்தில் சீமான் மீது வழக்கு தொடுத்தாலும் அதிமுகவினர் சீமானை காப்பாற்றினார்கள்.
அவரை காப்பாற்றுவதற்காக என்னை துடிக்க துடிக்க வைத்தனர். எவ்வளவு புகார்களை, மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு.. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு நான் போலீஸ் அலுவலகம் சென்று புகார் கொடுக்க போகிறேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications