திராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்கிறேன்.... உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
Recommended Video
சென்னை: திராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்பதாக திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன்.
— Udhay (@Udhaystalin) July 4, 2019
பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன்.
மாபெரும் மக்கள் இயக்கமாம் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்ற இணையற்ற பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை தாத்தா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாபெரும் மக்கள் இயக்கமாம் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்ற இணையற்ற பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை தாத்தா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/QexZ7YByNu
— Udhay (@Udhaystalin) July 4, 2019
இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன். பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications