ஸ்கூல் போக மாட்டேன்.. அடம் பிடிக்கும் குழந்தை..சந்திரபாபு பாட்டோடு குஷியான சிறுவன்- க்யூட் வீடியோஸ்
சென்னை: "கொரனோ இன்னும் முடியல.. 3வது அலை வருதாம்.. ஸ்கூலுக்கு போகமாட்டேன்.." என்று அம்மாவிடம் அடம்பிடிக்கும் அழகு பிள்ளை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
ஒரு வழியாக, கொரோனா குறைந்ததால், செப்டம்பர் 1ம் தேதியான இன்று கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைக்குப்பின் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் சிறுவன்
இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சிறுவன், ஒருவன், அவரது தாய் நாளை பள்ளி திறக்கப்படுவதாகவும், நீ பள்ளிக்குச் செல்கிறாயா என்று கேட்டதற்கு அச்சிறுவன் பள்ளிகள் திறக்கப்படாது. இன்னும் கொரோனா, முடியவில்லை அதனால் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி கேட்கும் தாய்
அந்த தாய் வீடியோ எடுத்துள்ளார். எனவே தெரிந்தேதான் கேள்விகளை முன் வைக்கிறார். ஆனால், சிறுவனுக்கு அது தெரியவில்லை. இயல்பாக பேசுகிறான். பிஞ்சு குரலுடன், அவன் பேசும் வார்த்தைகள்தான் இந்த வீடியோவின் ஹைலைட்டே. ஸ்கூலுக்கு போகனும் என்றதும் சிறுவன் முகத்தில் வரும் டென்ஷனும் க்யூட்டாகவே இருக்கிறது. ஸ்கூலுக்கு போகக் கூடாது என்பதற்காக எதை எதையோ சொல்லி தாயிடம் சமாளித்து பார்க்கிறான் அந்த தாய்.

குபீர் சிரிப்பு
இருப்பினும் பள்ளிக்கு சென்றேயாக வேண்டும், திறந்துவிட்டார்கள் என்று சொன்னதும், மூன்றாவது அலை வருதாம் என்று சீரியசாகவே சிறுவன் சொல்ல, மொத்த குடும்பமும் குபீர் என்று சிரித்து விட்டது. அந்த வீடியோதான் இப்போது பலராலும் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கப்பட்டு வருகிறது.

சந்திரபாபு பாடல்
சந்திரபாபு பாடல் இது ஒரு பக்கம் என்றால், வகுப்பில் ஒரு சிறுவன், "அன்னை " திரைப்படத்தில் சந்திரபாபு பாடிய, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற பாடலை அச்சு பிசகாமல் அழகாக பாடும் வீடியோவும் வைரலாக சுற்றி வருகிறது. சிறுவன் பின்னால் நிறைய சிறுமிகள் உள்ளனர். அனைவரும் பள்ளி யூனிபார்ம் அணிந்துள்ளனர். இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது அதில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சிறுவன் ரொம்பவே தத்ரூபமாக இந்த பாடலை பாடி அசத்துகிறான். 1962ம் ஆண்டு வந்த ஒரு பாடல் இந்த சிறுவன் வாயில் ரசனையோடு உச்சரிக்கப்படுவது சந்திரபாபு நடிப்புக்கும், கண்ணதாசன் பாடல் வரிகளுக்கும் அழிவில்லை என்று உணர்த்துவதாகத்தான் இருக்கிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications