Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உருக்குலைந்த பீலா வெங்கடேசனின் உடம்பு.. ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்ததா? மூளை புற்றுநோய்க்கு காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இதுபோன்ற நோய்கள் வரும் என்றார்கள்.. ஆனால், இப்போது அப்படியில்லை.. பிறக்கும் குழந்தைக்குகூட, சர்க்கரை நோய், புற்றுநோய் வருகிறது.. எனவே நோய்களுக்கு வயது கிடையாது.. பரம்பரையுடன் புற்றுநோய் தொடர்புடையதாக இருக்கலாமே தவிர, அளவுக்கு அதிகமான வேலைப்பளுவுக்கும், புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக எரிசக்தி துறை முதன்மை செயலாளருமான பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 56. மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலா வெங்கடேசன், 2 மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

Beela venkatesan brain cancer stress

அதாவது சிகிச்சை எடுத்துக்கொண்டபோது பீலாவுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது.. அதனால்தான், தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரையுமே அவர் சந்திக்கவில்லையாம்..

சம்மட்டியால் அடித்த வலி

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளன.. சாதாரண மலச்சிக்கலிலிருந்து, மூளையிலுள்ள புற்றுநோய் வரை இருக்கக்கூடிய அறிகுறி தலைவலிதான்.. ஒவ்வொரு தலைவலியும் வித்தியாசமானது.. மற்ற நோய்களை போல இதையெல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.. மூளையில் கட்டி என்பது அந்த காலத்திலிருந்தே இருக்கக்கூடிய நோய்தான்.. வெறும் தலைவலி மட்டும் இருக்காது, கை, கால் வலிப்பு மாதிரி வந்துவிடும்..

மூளையில் கட்டி வந்து புற்றுநோய் என்றால், சம்மட்டியால் தலையில் அடிப்பது போல வலி இருக்கும்.. எனினும் இதை பொதுவெளியில் பேசினால், சாதாரண தலைவலியை நினைத்துகூட சிலர் பயந்துவிடுவார்கள்.. அதேபோல மற்ற புற்றுநோய்களுக்கு காரணம் சொல்லலாம்.. ஆனால், மூளை புற்றுநோய்க்கு காரணம் எதுவும் கிடையாது..

பீலா வெங்கடேசன்

மூளையில் புற்றுநோய் வந்துவிட்டால், தற்போது சிகிச்சைகள் உள்ளன என்றாலும், உத்தரவாதம் தரமுடியாது.. இந்த புற்றுநோய் எப்போது, எவ்வளவு தூரத்தில் உள்ளது? நோய் முற்றிப்போய் வெளியே தெரிந்ததா? என்பதை பொறுத்தே சிகிச்சை பலன்தரும்.. இன்றைய காலக்கட்டத்தில் கேட்ரூடா, சைபர் நைப் போனற் ரேடியாலஜி மருந்துகள் வந்திருப்பதால், மூளை புற்றுநோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.. சைபர்நைட் தற்போது இந்தியாவிலேயே 4 இடங்களில் மட்டும்தான் உள்ளது..

பீலா வெங்கடேசனின் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும்.. என்னுடைய சம்பந்திகளுக்கு அவர் மிகவும் நெருக்கம்... கொரோனா நேரத்தில் பீலாவின் பணிகள் சிறப்பாக இருந்தன..

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இதுபோன்ற நோய்கள் வரும் என்றார்கள்.. ஆனால், இப்போது அப்படியில்லை.. பிறக்கும் குழந்தைக்கும் சர்க்கரை நோய், புற்றுநோய் வரும்.. எனவே நோய்களுக்கு வயது கிடையாது.. பரம்பரையுடன் புற்றுநோய் தொடர்புடையதாக இருக்கலாமே தவிர, வேலைப்பளுவுக்கும், புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

மூளை புற்றுநோய்

உடற்பயிற்சி செய்வதுகூட ஒரு அளவுகூட.. புனித் ராஜ்குமார் செய்த உடற்பயிற்சிகள் அபாயகரமானவை.. அன்றைய காலங்களில் குமாரசாமி என்ற யோகாசன நிபுணர் இருந்தார்.. 50களில் ஆரோக்கிய ரகசியம் என்ற தலைப்பில், கல்வி பத்திரிகையில் புகைப்பட தொடர் கட்டுரையை எழுதினார்.. அந்த தொடர் மிகவும் பிரபலமானது.. அதாவது, எந்த நோய்க்கு, என்ன யோகாசனம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் போட்டோவாக பதிவிட்டு அந்த கட்டுரையை குமாரசாமி எழுதியிருந்தார்..

இதன்காரணமாக, தமிழ்நாடு முழுக்க யோகா சென்டர்களை பலரும் துவங்கினார்கள்.. இறுதியில், குமாரசாமி 42 வயதிலேயே இறந்துவிட்டார்.. இதற்கு பிறகு தமிழ்நாட்டில் யோகா சென்டர்கள் குறைந்துவிட்டன.

இதய நோய்களும், யோகா ஆசனங்களும்

அதேபோல இதய நோய்களுக்கு சில யோகாசனங்களை கற்று கொடுத்தால், நோய்கள் குணமடையும் என்றும், இதற்கு மருத்துவர்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் எங்களிடம் அரசு தரப்பில் சொன்னார்கள்.. இதற்காக இதய 50 நோயாளிகளின் பெயர் தரப்பட்டு, அவர்களுக்கு ,அந்த குறிப்பிட்ட 3 யோகா ஆசனங்கள் சொல்லித்தரப்பட்டன. ஆனால் ஒருவருக்கும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 வருடங்கள் பயிற்சி தரப்பட்டும், நோய் குணமாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+