நயினாரை விடுங்க! நடிகை திரிஷாவுக்கு முன்வரிசை ஏன்? விளக்கினால் நல்லா இருக்கும்! நாதக நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரதமர் மோடி விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் எப்படி அமர்ந்திருந்தார் என்பது நியாயமான கேள்விதான். அதே சமயம், சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது முன்வரிசையில் நடிகை திரிஷா அமர்ந்திருந்தது ஏன் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற மேடையின் முன்வரிசையில் அரசுப் பொறுப்பில் இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி அமரலாம்? எனக் கேட்டிருக்கிறார் மாணிக் தாகூர். அதனை அமைச்சர் நிர்மல்குமாரும் வழிமொழிந்திருக்கிறார்.

idumbavanam karthik nainar nagendran

நயினார் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டது குறித்தான கேள்வி மிக நியாயமானது; ஏற்புடைய வாதம்! அதேசமயம், சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த அடிப்படையில் நடிகை திரிஷா அமர வைக்கப்பட்டார்? என்பதை விளக்கினால், நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ்

சென்னை ஐஐடி மெட்ராஸில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விழா மேடையில் அமர்ந்திருந்தார்.

மாணிக்கம் தாகூர்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவில் விருதுநகர் எம்பியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது மத்திய அரசு நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டோகால் மூலம் அமரவைக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

நிர்மல் குமாரும் கேள்வி

அது போல் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாரும், "மத்திய அரசு நடத்திய நிகழ்ச்சியில் எம்எல்ஏ அல்லது எம்பி போன்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவ பொறுப்பிலும் இல்லாத கட்சி சார்ந்த நபர் எந்த புரோட்டோகால் அடிப்படையில் மேடையில் அமர வைக்கப்பட்டார் என தெரியவில்லை. இது தவறான முன்னுதாரணம். அரசு விழாவில் எம்எல்ஏ அல்லது எம்பி இல்லாத ஒருவரை அமர வைத்தது மிகப் பெரிய தவறு" என விமர்சித்திருந்தார்.

நயினார் பதில்

இந்த சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் நேற்றைய தினம் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் நான் அமர்ந்தது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

மேடையில் அமர்ந்தது ஏன்?

நான் மேடையில் அமர்ந்ததுதான் இப்போது நாட்டுக்குத் தேவையான பிரச்சினையா? மின்வெட்டை சரிசெய்யாமல் இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

idumbavanam karthik nainar nagendran

மெட்ரோ திட்டம்

பிரதமரும், முதல்வரும் கைகோர்த்து மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்ததே மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதற்கு சாட்சி. தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை. டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை.

செவிலியர் போராட்டம்

செவிலியர் போராட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த போது ஆதரித்த தவெக, இப்போது அவர்களை அடித்து இழுத்துச் சென்று கைது செய்கிறது. தமிழகம் முழுவதுமே மின்வெட்டில் மூழ்கி போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேவகவுடா விழாவில் மூப்பனார்

மேலும் நயினார் நாகேந்திரன் முதல் வரிசையில் அமர்ந்தது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர்.என். ஜெயபிரகாஷ் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி மெட்ராஸில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்வில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டது சாதாரணமான விஷயம்தான். இதற்கு முன்பு இது போல் சம்பவங்கள் நடந்துள்ளன. தேவகவுடா பிரதமராகவும், கருணாநிதி முதல்வராகவும் இருந்த போது ஒரு நிகழ்வில் மேடையில் மூப்பனார் அமர்ந்திருந்தார். எனவே நயினார் நாகேந்திரன் மெட்ரோ விழாவில் கலந்து கொண்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+