என்ன பாஜக வளருதா? ஈரோடு கிழக்கில் அண்ணாமலை போட்டியிடுவாரா? ‛‛தைரியம்’’ இருக்கா.. சீண்டிய ஈஸ்வரன்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா? தைரியம் இருந்தால் போட்டியிடட்டும்'' என கேள்வி எழுப்பி கொங்கு ஈஸ்வரன் மீண்டும் பாஜகவை சீண்டியுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாள இருந்து வருபவர் கொங்கு ஈஸ்வரன். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.
இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டசப தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கொங்கு ஈஸ்வரன்
இந்நிலையில் தான் கொங்கு ஈஸ்வரன் அடிக்கடி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கொங்குநாடு என்ற பிரச்சனை சமீபத்தில் எழுந்த நிலையில் பாஜகவின் அண்ணாமலைக்கு போட்டியாக கொங்கு ஈஸ்வரன் தான் ‛கொங்குநாடு முதல்வர்' என சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையை கொங்கு ஈஸ்வரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மீண்டும் சீண்டல்
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி வருவதாக அந்த கட்சியினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில் தான் கொங்கு ஈஸ்வரன் அண்ணாமலைக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தைரியம் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலைக்கு சவால்
இதுபற்றி கொங்கு ஈஸ்வரன் கூறுகையில், ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு போட்டியிட தைரியம் இருக்கிறதா? முடிந்தால் போட்டியிட்டு பாருங்கள். இந்த தேர்தல் மூலம் உங்களை மக்கள் ஏற்கிறார்களா? எவ்வளவு பேர் வாக்களிக்கிறார்கள் என பார்க்கலாம். அதனை பொறுத்து உங்களின் செயல்பாடுகள், நடைமுறைகளை மாற்றி கொள்ள வாய்ப்பு கிடைக்கும்'' என பேசியுள்ளார்.

இடைத்தேர்தல் ஏன்?
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரியாரின் கொள்ளுப்பேரனான இவர் அதிமுக கூட்டணியின் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம் யுவராஜாவை வீழ்த்தி வாகை சூடினார். இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்நிலையில் தான் 6 மாதத்துக்குள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜக சார்பில் அந்த தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா? என கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications