பாலியல் அத்துமீறல்.. இனி ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்
சென்னை: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனை மட்டுமல்லாமல் உடனடியாக அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஆசிரியர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி அருகே போச்சம்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுதா மற்றும் அவரின் கணவர் வசந்தகுமார் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்படும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது.
அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தில் உண்மைதன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வி சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, தலைமையாசிரியர்களுக்கு தலைமை பண்பு தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்சனைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்பட்டு, அது காவல்துறை கைகளுக்கு சென்றுவிட்டால், அவர்கள்தான் இனி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications