சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் யோகிகளால் உருவாகவில்லை.. போய் படிச்சிட்டு வாங்க.. ஆளுநருக்கு ஜோதிமணி அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக வரலாறு தெரியாவிட்டால் படித்து தெரிந்துகொள்ள வெண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட் பதிவிட்டுள்ளார்.

கோவை நவக்கரையில் உள்ள ஜே எஸ் எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதம்பாக்கம் சத்யா இறந்துவிடுவார் என நான் நினைக்கவே இல்லை.. சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்! ஆதம்பாக்கம் சத்யா இறந்துவிடுவார் என நான் நினைக்கவே இல்லை.. சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!

திட்டமிட்டு நடந்த தாக்குதல்

திட்டமிட்டு நடந்த தாக்குதல்

நாட்டின் பெரும் பிரச்சினையாக பயங்கரவாதம் இருந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கிறது. பயங்கரவாதம் அனைத்துக்கும் எதிராக உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிகளவில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வருத்தம் அளிக்கிறது

வருத்தம் அளிக்கிறது

பயங்கரவாதத்தை உருவாக்கும் ஓர் இடமாக கோவை மாநகரம் திகழ்வது வருத்தம் அளிக்கிறது. இந்த தாக்குதல் ஆபத்தானது. இதை நாம் முறியடிக்க வேண்டும். இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக இருக்கிறது. இதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு குறித்த தமிழக போலீஸ்காரர்களின் விசாரணை பாராட்டத்தக்கது. எனினும் கால தாமதம் செய்யாமல் முன் கூட்டியே இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) கொடுத்திருக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.

சனாதன தர்மம் எனும்..

சனாதன தர்மம் எனும்..

தொடர்ந்து அவர் பேசுகையில் ''தமிழகம் தான் அதிக சித்தர்களையும்.. யோகிகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சனாதன தர்மம் எனும் அடிப்படை கொள்கையினை தமிழக மக்கள் மறந்துவிடக்கூடாது. நமது வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்பத்தில் மட்டும் இருந்துவிட கூடாது. இந்திய கலாச்சாரம், யோகா மற்றும் மருத்துவத்திலும் அறிவை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்" என்று பேசினார்.

படித்து தெரிந்துகொள்ளலாம்

படித்து தெரிந்துகொள்ளலாம்

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு தமிழக வரலாறு தெரியாவிட்டால் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழ்நாடு யோகிகளால் அல்ல.. சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது. சமூக சீர்திருத்த கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டது. இங்கே யோகிகள் கூட சமூக சீர்திருத்தவாதிகளே. அதனால் தான் தமிழகம் பாஜகவை ஏற்பதில்லை. ஆளுநருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Congress MP Jyothimani tweeted that if Tamil Nadu Governor RN Ravi does not know the history of Tamil Nadu, he should read it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X