நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.. ஆதங்கத்தோடு பேசிய கமல்.. கொங்குநாடு சர்ச்சைக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : மக்கள் நீதீ மய்யம் தொழிற்சங்கம் அறிமுக விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என்றார்.

Recommended Video

    Tamilnadu Olympics வீரர்களுக்கு Surprise தந்த Kamal | Oneindia Tamil

    தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று கூறிய கொங்குநாடு என தனியாக மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுப்பதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    சட்டசபை தேர்தலில் படுதோல்வியை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடர்ந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் விலகி வந்த நிலையில் அது பற்றி எந்த கருத்தும் கமல் வெளியிடவில்லை. மிக அமைதியாக கட்சியின் உள்கட்டமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    மநீம தொழிற்சங்கம்

    மநீம தொழிற்சங்கம்

    மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

    என் வசனம் புரியாதா

    என் வசனம் புரியாதா

    தொடர்ந்து மேடையில் பேசிய கமல்ஹாசன் " மக்கள் நீதி மய்யத்திற்கென்று அடிப்படை தகுதி என்று ஒன்று இருக்கிறது, அது நேர்மை அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கலைஞர் வசனம், இளங்கோவன் இவர்களுடைய வரிகளை புரிந்து கொண்ட தமிழகத்தில், என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.

    முறிடியக்கணும்

    முறிடியக்கணும்

    எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால் ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை . தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும். லாங் லிவ் தமிழ்நாடு .

    நல்ல அரசியல்

    நல்ல அரசியல்

    எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை . இனி காந்தி போன்ற ஆட்களால் தான் இந்தியாவில் நல்ல அரசியல் செய்ய முடியும் . ஆசியாவில் முதல் (centrism) நடுநிலையான கட்சி மக்கள் நீதி மய்யம்" இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+