சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே டாப் சென்னை ஐஐடிதான்.. இன்டர்வியூவில் கலக்கிய மாணவர்கள்! ப்பா சம்பளம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் வேலை வாய்ப்பினை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது.

2021-2022 கல்வி ஆண்டில் இங்கு படித்த மாணவர்களில் சுமார் 1,199 பேரை 380 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்ந்தெடுத்துள்ளன.

அதேபோல 231 மாணவர்கள் முன் வேலை வாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இன்டென்சிஷ்ப் உள்ளிட்ட எண்ணிக்கைகளை எல்லாம் சேர்த்தால் சுமார் 1,430 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்த மத்திய அரசு! முதலிடத்தில் சென்னை ஐஐடி! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்த மத்திய அரசு!

வேலையின்மை

வேலையின்மை

இந்தியாவில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளது. இது குறித்து காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி, " 2021ம் ஆண்டு நிலவரப்படி, 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகபட்சமாக 28.3 சதவிகிதமாக இருக்கிறது. குறைந்தபட்சமாக ஜப்பானில் 4.4 சதவிகிதமும், ஜெர்மனியில் 6.9 சதவிகிதமாகவும், இஸ்ரேலில் 8.8 சதவிகிதமாகவும் இருக்கிறது" என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்திய நிலைமை

இந்திய நிலைமை

CMIE தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் 7.1% ஆக இருந்த நாட்டின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறத்தில் வேலையின்மை 1.4% புள்ளிகள் அதிகரித்து 8% ஆகவும், நகர்ப்புறத்தில் இது 0.9% புள்ளிகள் குறைந்து 7.3% ஆகவும் உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் படித்து வேலை பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 2018-2019 ஆண்டைக் காட்டிலும் 2021-2022ம் ஆண்டில் அதிகமானோர் வேலையில் சேர்ந்துள்ளனர்.

 சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

2021-2022ம் ஆண்டில் கல்வி பயின்ற மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 380 நிறுவனங்கள் சுமார் 1,199 பேரை பணிக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளன. 2018-19 கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 1,151 ஆக இருந்தது. மேற்குறிப்பிட்ட 380 நிறுவனங்களில் 14 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 45 பேர் தேர்வாகியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த ஆண்டில் 61 எம்பிஏ மாணவர்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியுள்ளனர். அதாவது ஆய்வு துறையில் 100 சதவிகித மாணவர்களுக்கு வேலை உறுதியாகியுள்ளது. இவ்வாறு தேர்வான மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.21.48 லட்சமாகும். அப்படியெனில் மாதத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இதுவே அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.98 கோடி வரை வழங்கப்படுகிறது என ஐஐடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பதிவு செய்த மாணவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊதியம்

ஊதியம்

இது குறித்து கருத்து தெரிவித்த ஐஐடி பேராசிரியர் சிஎஸ் ஷங்கர் ராம், "வேலைவாய்ப்புகள் ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பு அளவை பிரதிபலிக்கின்றன. எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். இதனாலேயே அதிக வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐஐடி மெட்ராஸில் எங்கள் மாணவர்கள் பெற்ற விதிவிலக்கான பாடத்திட்டப் பயிற்சி மற்றும் இணை பாடத்திட்ட வாய்ப்புகளுக்கு இது ஒரு சான்றாகும்" என்று கூறியுள்ளார்.

இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் முதற்கட்டமாக 45 வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. இதில் 11 வாய்ப்புகள் Rakuten Mobile, Inc நிறுவனத்திலிருந்து மட்டுமே வந்துள்ளது. மேலும், இரண்டாவது கட்டத்தில் Glean, Micron Technologies, Honda R&D, Cohesity, Da Vinci Derivatives, Accenture Japan, Hilabs Inc., Quantbox Research, MediaTek, Money Forward, Rubrik, Termgrid மற்றும் Uber ஆகிய நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புகள் குவிந்தன.

English summary
The average salary received by students during campus placements for 2021-22 is ₹ 21.48 lakh per annum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X