கவனிச்சீங்களா.. "இல்லம் தேடி கல்வி" டி-ஷர்ட் போட்டுகிட்டு எங்கே போறாரு பாருங்க.. பாய்ந்தது ஆக்ஷன்
இல்லம் தேடி கல்வி டி-ஷர்ட் அணிந்த நபரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
சென்னை: "இல்லம் தேடி கல்வி" டி சர்ட் போட்டுக் கொண்டு, டாஸ்மாக் கடையில் நுழையும் நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை அதிரடியாக பாய்ந்துள்ளது..
Recommended Video
தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்...
இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகம்
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் அப்போது எழுப்பப்பட்டன... மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே ஒரு விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

புதிய கல்வி கொள்கை
அதேபோல, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார்.. மேலும், தன்னார்வலர்களைக் கொண்டு இந்த திட்டத்தின் மூலம் கல்வியை மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டம் வகுந்திருந்தது. அந்த வகையில், திருச்சியில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 8 கலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடங்கி நடைபெற்றது.

திருச்சி
இந்நிலையில், திருச்சி தொட்டியம் அருகே ஒரு கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அந்த குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர் பள்ளிக் கல்வித்துறையின் "இல்லம் தேடி கல்வி" திட்டம் என்ற டி ஷர்ட்டுடன் டாஸ்மாக் கடையில் நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த நபர் பெயர் சர்மிளா சங்கர்.. அந்த வீடியோவில், டாஸ்மாக் கடை ஒன்றில் கூட்டம் கூடி நிற்கிறது.. அந்த கூட்டத்தை பிளந்து கொண்டு சங்கர் டாஸ்மாக்கிற்குள் நுழைகிறார்..

டி-ஷர்ட்
ப்ளூ கலர் டி-ஷர்ட்டுடன் உள்ளே நுழையும் சங்கர், மதுவை வாங்கிக்கொண்டு, வெளியே வருகிறார்.. டாஸ்மாக் வெளியே, இல்லம் தேடி கல்வி' பிரச்சார வேன் நிற்கிறது.. அந்த வேனில் மதுவுடன் ஏறி செல்கிறார் சங்கர்.. திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 8 பிரசாரக் குழுக்களுக்கு இந்த சர்மிளா சங்கர் தான் தலைமையாம்.. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்..

புகார்
அது வைரலாகி பலருடைய கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்த வீடியோ தொடர்பான புகார் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளிக்கு செல்ல, அந்தக் கலைக்குழுவை பிரச்சாரத்திலிருந்தே நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் முதன்மை கல்வி அலுவலர்.. அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட உடையுடன் டாஸ்மாக்கில் செல்லலமா? படிக்கிற பிள்ளைகள் இதையெல்லாம் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இதுபோன்ற சிலரால்தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்ற விமர்சனங்களை பொதுமக்கள் முன்வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications