சென்னை, தாம்பரம், கன்னியாகுமரி உள்பட 11 இடங்களில் என்ஐஏ சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் என்ஐஏ இன்று (செப்டம்பர் 24) அதிகாலை முதல் சோதனை நடத்திய சோதனையில் ரொக்கம், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், கன்னியாகுமரியில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக சோதனை நடந்தது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில் இருந்தது. இதுபற்றி புகாரின் பேரில் சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டியதாக புகார் எழுந்தது.

மேலும் அவர்கள் இதற்காக சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தினார்கள் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, . கெளரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன், அவர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர் .
இந்நிலையில் இந்த வழக்கில் தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் இருந்து வழக்கு என்ஐஏ-வுக்கு விரைவில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு அண்மையில் மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.
இந்த விவாகரத்தில் சென்னை, தாம்பரம், கன்னியாகுமரி உள்பட மொத்த தமிழ்நாட்டில் 14 இடங்களில், வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். வழக்கில் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் தீவிரமாக சோதனை நடந்தது. பல மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications