பெற்றோர்களே உஷார்! 7வது மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி! சென்னையில் சோகம்.. எப்படி நடந்தது?
சென்னை: சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிப்பில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை 7 வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை ஓட்டேரி ஸ்டிபன்சன் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வருபவர் வனிதா 35. இவர் இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரது கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் வனிதா தனது தம்பி தினேஷ் கமார், தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டேரியில் வசித்து வருகிறார். இவர்கள் அடுக்குடிமாடி குடியிருப்பின் 7 வது மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் வனிதாவின் இரண்டரை வயது பெண் குழந்தையான கவாஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. சோபா மீது ஏறி ஜன்னலை திறந்து பார்த்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக குழந்தை தவறி கீழே விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனிதா கதறியபடி வேகமாக கீழே சென்றார்.
உடனடியாக வனிதா தனது குடும்பத்தினர் உதவியுடன் குழந்தையை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் வனிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கினர். குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி அறிந்தவுடன் ஓட்டேரி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications