மகளிடம் அத்துமீறிய “போதை” தந்தை.. சுத்தியலால் ஒரே அடியில் கொன்ற மனைவி - பெண்ணை விடுவிக்கும் போலீசார்..?
சென்னை: சென்னையில் குடிபோதையில் பெற்ற மகளிடம் எல்லைமீற முயன்ற குடிகார கணவனை மனைவி சுத்தியலால் அடித்து கொலை செய்த நிலையில், தற்காப்புக்காக கொலை நிகழ்ந்ததால் மனைவியை விடுவிக்க காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக குடிபோதையில் எல்லை மீறும் சம்பவங்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
மதுபோதையில் மற்ற பெண்களிடம் மட்டுமல்லாது வீட்டிலுள்ள மகள் உள்ளிட்டவர்கள் மீதே அரங்கேற்றப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஒருபுறம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் அதிர்ச்சி
இந்நிலையில் தான் சென்னையில் குடிபோதையில் பெற்ற மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை அவரது மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியில் உள வாழைமாநகரில் உள்ள ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு கடத்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரீத்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மகளிடம் அத்துமீறிய தந்தை
தம்பதியினருக்கு 20 வயதில் கீர்த்தி என்ற மகளும்,, 10 வயதில் கவுதம் என்ற மகனும் உள்ளது. கீர்த்திக்கு திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், பிரதீப் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல மது குடித்துவிட்டு தலைக்கேறிய போதையில் வீட்டுக்குள் நுழைந்த பிரதீப் தனது மகள் என்றும் பாராமல் அவரிடம் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து கீர்த்தி சத்தம் போட்டதை அடுத்து அங்கு வந்த பிரீத்தா மகளை தனது கணவரிடம் இருந்து மீட்பதற்காக போராடியுள்ளார்.

சுத்தியலால் அடித்துக் கொலை
மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட கணவரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ப்ரீத்தா வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அருகில் இருந்தோர் கொலை சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

மனைவியை விடுவிக்க முடிவு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு கொலை செய்யப்பட்ட பின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கீர்த்தி மற்றும் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கில் திடீர் திருப்பமாக மகளைக் காப்பாற்றவும் தற்காப்புக்காக கொலை செய்ததால் அவரை விடுதலை செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது












Click it and Unblock the Notifications