சென்னையில் 97 ரூபாயை தாண்டியது ஒரு லிட்டர் பெட்ரோல்.. டீசல் விலையும் கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 ரூபாயை தாண்டியது, லிட்டருக்கு இன்று ஒரே நாளில் 25 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலையும் கிடுகிடு உய்ரவை கண்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 25 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலை 27 பைசா உயர்ந்துள்ளது.

In Chennai, the price of a liter of petrol has crossed Rs 97

இதையடுத்து, இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக கட்டுமான பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தபடி உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள், சொந்தமாக கார் வைத்திருப்போர் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவீனம் ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. இதை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+