Vijay: தேர்தலில் வண்டி வண்டியாக வந்து பணத்தை கொட்டுவார்கள்! என்ன பண்ண போறீங்க? ஒரே அடியாக போட்டுடைத்த விஜய்
சென்னை: அடுத்த வருடம் வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுவார்கள்.. அது உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான்.. என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணனும்னு உங்களுக்கு தெரியும். அதை பண்ணுங்க, என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிவருகிறார் . இந்த ஆண்டு கல்வி விருது விழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்ட உள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மலும், மாணவருக்கு வைர மோதிரமும் வழங்கப்பட உள்ளது. 2, 3-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது. அதன்படி 600 மாணவ - மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் பேச்சு
இந்த விழாவில் பேசிய விஜய்
நீட் தேர்வு மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி உலகில் சாதிக்க பல உண்டு.. எல்லாவற்றையும் படிக்கலாம். ஒரேயொரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனென்றால், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது.
சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் சென்றுவிடாதீர்கள். அந்தச் சிந்தனை உங்களையோ, உங்கள் மனதையோ பாதிக்கும் அளவுக்கு விட்டுவிடாதீர்கள். அறிவுரை விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா விளைவிக்கிறார்கள்? தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா உற்பத்தி செய்கிறார்கள்? வெய்யில், மழையில் சாதி இருக்கா? மதம் இருக்கா?
சாதி, மத பிரிவினை சிந்தனை பக்கம் செல்லாதீர்கள். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள்; அதுதான் ஏஐ, உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி. ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுவது போல கேள்வி கேட்கப்பட்டுள்ளது; இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அடுத்த வருடம் வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுவார்கள்.. அது உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான்.. என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணனும்னு உங்களுக்கு தெரியும். அதை பண்ணுங்க. நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்களுக்கு வாக்களிக்க சொல்லுங்கள்; வீட்டில் உள்ளோரிடம் ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள்; காசு வாங்கி விட்டு ஓட்டுப்போடும் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தாதீர்கள்.. எல்லோருக்கும் எல்லாம் சரிசமமாக கிடைக்கும். அதற்கான முதல் படியாக வீட்டில் உள்ள பெற்றோரிடம், அவங்கவங்கள் ஜனநாயக கடமையை சரியாக சொல்ல வலியுறுத்துங்கள்.
அடுத்த வருஷம் வண்டி வண்டியா கொட்டப்போறாங்க, நீங்க உங்க ஜனநாயக கடமையை செய்யுங்க, என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications