வேகம் எடுத்த கொரோனா.. தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம்.. மாஸ் ஏற்பாடு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதனால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி முகாம்
இதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு துரிதப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் இடத்தில் இன்று முகாம்
இந்த முகாம்கள் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 31வது வாரமாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் துவங்கிய முகாம்
அதன்படி இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியும். தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

1.45 கோடிக்கும் அதிகமானவர்கள்
தமிழகத்தில் தற்போது முதல் தவணை, 2வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் 1.45 கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். குறிப்பாக சென்னையை பொறுத்தமட்டில் நேற்றைய நிலவரப்படி 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல், 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்காக இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications