தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம்! இலவச பூஸ்டர் டோசும் செலுத்த வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொள்ள முடியும்.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. தினசரி பாதிப்பு என்பது 2,500யை கடந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல சரிந்து வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுஇடங்களில் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

32வது தடுப்பூசி முகாம்
இதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு விரைப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 32வது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் இடத்தில் இன்று முகாம்
இந்த முகாம்கள் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியும். தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசிம் போட்டு கொள்ள முடியும். ஏற்கனவே முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் 75வது சுதந்திர தினத்தையொட்டி செப் 28 வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியும்.
Recommended Video

சுகாதாரத்துறை இயக்குனர்
இந்த முகாம் மூலம் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத, 1.5 கோடி மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ‛‛தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் 30க்குள் தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications