சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனல் பறக்கும் களம்.. "யாவாரம்" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்!

Google Oneindia Tamil News

சென்னை : கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு தமிழக தேர்தல் களத்தில் அனல் தெறிக்கிறது. அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியன ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே சொல்லலாம்.

அடுத்தகட்ட வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை என ஒவ்வொன்றாக அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நாள் நெருங்குவதால் அரசியல் நிலவரங்களை மக்களும் உன்னிப்பாக கவனிக்க துவங்கி விட்டனர்.

இந்த முறை பல கட்சிகள் கூட்டணி மாறி உள்ளன. சில கட்சிகள் புதிய கூட்டணிக்கு மாறி உள்ளன. சில கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிடவும், சில கட்சிகள் போட்டியிடாமல் ஆதரவு மட்டும் வழங்கவும் முடிவு செய்துள்ளன. இதுவரை உறுதி செய்யப்பட்ட கூட்டணி நிலவரங்களின் விபரத்தை இங்கே பார்க்கலாம்.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

பாமக - 23

பாமக - 23

தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அதிமுக சார்பில் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதை தவிர்த்து அதிமுக 170 க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

காங்கிரஸ் - 25

விசிக - 6

சிபிஐ - 6

சிபிஐ (எம்) - 6

மதிமுக - 6

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3

மனித நேய மக்கள் கட்சி - 2

தமிழக வாழ்வுரிமை கட்சி - 1

மக்கள் விடுதலை கட்சி - 1

மக்கள் நீதி மையம் கூட்டணி

மநீம - 154

சமக - 40

ஐஜேகே - 40

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கருணாசின் முக்குலத்தோர் புலி படை என பல கட்சிகளுக்கும், தங்கள் கூட்டணியில் இணைய வர வேண்டும் கமலும், சரத்குமாரும் அழைப்பு விடுத்தனர். ஆனால் எந்த கட்சிகளும் வராததால் தங்களுக்குள் தொகுதிகளை பிரித்துக் கொண்டு, தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளன.

 தொடரும் திமுக.,வின் கூட்டணி பேச்சு

தொடரும் திமுக.,வின் கூட்டணி பேச்சு

திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் அக்கட்சியையும் சேர்த்து 10 கட்சிகள் உள்ளன. இருப்பினும் சிறிய கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முழுவதுமாக முடிந்த பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. 234 ல் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கி உள்ள திமுக 150 க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.

 எங்க வழி தனி வழி

எங்க வழி தனி வழி

மற்ற கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சு நடத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அணிவித்துள்ளார். தொடர்ந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான், நேற்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். திருவெற்றியூர் தொகுதியில் தானும் போட்டியிட போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

English summary
In Tamilnadu, which party got how many seat sharing in his alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X