• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னாது.. 50 சீட்டா? இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா? இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா

|

சென்னை: முதலில் பாஜக 60 சீட் கேட்டது.. அப்பறம் 50 சீட் கேட்டார்களாம்.. இறுதியில் 30தான் ஒதுக்க முடியும் என்பது போல அதிமுக யோசித்து வருகிறதாம்.. இந்த சீட் விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், பாஜக தமிழகத்தில் எங்குதான் போட்டியிடும்? எந்தெந்த தொகுதிகளை கேட்க வாய்ப்பிருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

2004 தேர்தலையே எடுத்து கொண்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவாக பிரகாசிக்கவில்லை... ஆனால் அந்த தேர்தலில் காங்கிரசை மையப்படுத்தி அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியே மத்தியில் ஆட்சி அமைத்தது... அப்போது அதிமுகவுடன் இருந்த பாஜக கூட்டணி 33 சதவிகித சதவீத வாக்குகளை பெற்றது.

அதுபோலவே, 2009 எம்பி தேர்தலிலும், இங்கு பாஜக தனித்து போட்டியிட வேண்டிய சூழல்தான் ஏற்பட்டது... அப்போதுகூட ஒரு தொகுதியிலும் அது ஜெயிக்கவில்லை.. வாக்கு சதவீதமும் 2.3 தான் பெற்றது.. கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாவே, வெறும் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.. அதுபோல,தான் 2014 தேர்தலிலும் ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

13 வயது சிறுமி பலாத்காரம்.. எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி அதிரடியாக கைது.. பகீர் தகவல்கள்

 வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

இதுதான், 2011 தேர்தலும், 2016 தேர்தலிலும்.. வாக்குசதவீதம் 3 சதவீதத்தைகூட தாண்டவில்லை.. சுருக்கமாக சொல்லபோனால், இந்த 22 வருஷத்தில் சட்டசபை தேர்தலில் குறிப்பிடும்படியான வெற்றியை பாஜக நிகழ்த்தவில்லை.. அதேபோல, பெரும்பாலான தொகுதிகளிலும் பாஜக வலு சேர்க்கவில்லை.. இன்னமும்கூட ஒரு சில தொகுதிகளை மட்டுமே நம்பி உள்ளது.. அந்த தொகுதிகளை மட்டுமே நம்பி கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவோம் என்று மார்தட்டி வருகிறது.

 அமித்ஷா

அமித்ஷா

இப்போது 60 சீட் கேட்டுள்ளது.. அமித்ஷா வந்து போனபோது 50 சீட் கேட்டதாகவும் ஒரு தகவல் கசிந்தது.. ஆனால் அது புரளி என்று தெரிந்துவிட்டது.. அதிமுகவால் பாஜகவுக்கு 30 சீட் ஒதுக்கினாலே பெரிசு என்ற மனோபாவம் உள்ள நிலையில், எந்த தொகுதிக்கு பாஜக குறி வைத்து வருகிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.

 பாஜக

பாஜக

எப்போதுமே கொங்கு மண்டலம் பாஜகவை கைவிடாது.. மூத்த தலைவர்கள் சிபிஆர் முதல் வானதி வரை அங்கு இருக்கிறார்கள்.. ஆனால் இந்த 3 வருடங்களில் கொங்குவை தன் கைப்பிடியில் வைத்துள்ளது அதிமுக.. அந்த மண்டலத்திற்கு செய்துள்ள பணிகளும், காரியங்களும் ஏராளம்.. முதல்வரே இந்த முறை எடப்பாடியைவிட்டுவிட்டு, சாதிய வாக்குகள் நிறைந்த கோவையில் போட்டியிடலாமா என்று யோசித்து வருவதாக செய்திகள் கசிந்தன.. அந்த அளவுக்கு அதிமுக வலுவாக உள்ள நிலையில், பாஜகவுக்கு கொங்குவை ஒதுக்குமா என்பது தெரியவில்லை.

குமரி

குமரி

அதேபோல, தென் மாவட்டங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது.. காரணம், தென் மாவட்டம் என்றால் குமரிதான்.. அந்த குமரியிலும் பொன்.ராதா தோற்கும் நிலை ஏற்பட்டதையும் நினைவுகூர வேண்டி உள்ளது.. காங்கிரஸ் மண்ணில் காவி கொடி மலருமா என்பது தெரியவில்லை.. அதை விட்டால் திண்டுக்கல் மாவட்டம்.. பிறகு ராமநாதபுரம்.. எப்படி பார்த்தாலும் கிழக்கே பெரிய அளவில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை.

 பாமக

பாமக

அங்கேயே அந்த நிலை என்றால் வடக்கே இன்னும் மோசம்.. வன்னியர்களின் வாக்குகளால் சூழ்ந்துள்ள நிலையில், அதிமுக, திமுக, பாமக என 3 பேருமே அங்கு டஃப் தந்து கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு வேல்முருகன் வேறு களத்தில் இருக்கிறார்.. அதனால் தான், எதுக்கு வம்பு என்று, இந்துக்களின் வாக்கு வங்கியை மட்டும் குறி வைத்து பாஜக கேட்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத சூழலில் தமிழகத்தில் தடம்பதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பாஜக வைப்பது தவறில்லை.

அறுவடை

அறுவடை

ஆனால், அதற்கான கட்டமைப்பை தமிழகம் முழுவதும் பெருவாரியான தொகுதிகளில் அது வலுப்படுத்தி உள்ளதா என்பதைதான் யோசிக்க வேண்டி உள்ளது. என்னதான் வேல் எடுத்து கொண்டு இந்துக்களின் வாக்குகளை அள்ள முயன்றாலும், மக்களோடு மக்களாக நின்று செய்து தந்த நலத்திட்டங்களும், அளப்பரிய நற்காரியங்களும்தான் வாக்காக உருமாறும்.. அந்த வகையில் பாஜக வரப்போகும் தேர்தலில் என்ன பலனை அறுவடை செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

 
 
 
English summary
In which constituency is BJP going to contest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X