தமிழ்நாட்டில் மழை.. வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு.. இந்த 10 மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய போகுதாம்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.. இது படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்த தாழ்வு மண்டலமானது, கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது... எனவே, கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது..

அறிவிப்பு

அறிவிப்பு

பல்வேறு மாவட்டங்களில் இதனால் மழை பெய்ய போவதாக எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென வலுவிழந்துள்ளது.. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.. அதில், 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது... இது, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வலுவிழக்க ஆரம்பித்தது.. நேற்றைய காலை நிலவரப்படி, தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதனால், கன மழை வாய்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது... தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.. எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர்

மேலும், தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து இன்று கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதற்கேற்றவாறு, கடலூரில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது.. அதற்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்தது...

 இன்று மழைக்கு வாய்ப்பு

இன்று மழைக்கு வாய்ப்பு

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.. இருப்பினும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது... மற்றொருபக்கம் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர்... இதனிடையே, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

 10 மாவட்டங்கள்

10 மாவட்டங்கள்

அதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+