வருமான வரி ரிட்டர்ன்.. 2 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும் ரீஃபண்ட்? ஆச்சரியமான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித் தாக்கல் (ITR) சரிபார்க்கப்பட்ட பிறகு, 10 முதல் 30 நாட்கள் அல்லது அதிகபட்சமாக 45 நாட்கள் வரை ரீஃபண்ட் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. எனினும், சில நேரங்களில், ரீஃபண்ட் தொகை சில நாட்களிலேயே கூட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால் ஒருவருக்கு வருமான வரித் தாக்கல் செய்த 2 மணி நேரத்திலேயே ரீஃபண்ட் கிரெடிட் ஆகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். வருமான வரித்துறையை டேக் செய்து அவர் வெளியிட்ட பதிவில் பலரும் எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நமது நாட்டில் பொதுவாக, வருமான வரித் தாக்கல் (ITR) சரிபார்க்கப்பட்ட பிறகு, 10 முதல் 30 நாட்கள் அல்லது அதிகபட்சமாக 45 நாட்கள் வரை ரீஃபண்ட் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. அதேநேர சில சமயங்களில், ரீஃபண்ட் தொகை சில நாட்களிலேயே கூட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் வருமான வரித் துறை தனது நடைமுறைகளை அண்மையில் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. எனினும் சில காரணங்களால் ரீஃபண்ட் கிடைப்பதில் ஒருசிலருக்கு தாமதம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

Income tax refund be credited within 2 hours Surprising information

ஏனெனில் முன்பு, ரீஃபண்ட் வழங்கப்பட்ட பிறகே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது, ரீஃபண்ட் வழங்கப்படுவதற்கு முன்பே வரிக் கணக்குகள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. . இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது தீர்க்கப்பட்ட பின்னரே ரீஃபண்ட் அனுப்பப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தாமதத்திற்கான ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரம் நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்த பிறகு, அதை மின்னணு முறையில் (e-verification) சரிபார்ப்பது கட்டாயம் ஆகும். இல்லாவிட்டால் ரீஃபண்ட் பிராசஸ் தாமதமாகும் என்கிறார்கள். பொதுவாக ரீஃபண்ட் பெறுவதற்கு நாம் வருமான வரித்துறைக்கு அளிக்கும்
ங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். வங்கியின் பெயர், IFSC கோட் மற்றும் கணக்கு எண் போன்ற தகவல்களில் எந்த பிழையும் இருக்கவே கூடாது. வங்கி கணக்கு முன் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டியதும் கட்டாயம் ஆகும். அதேபோல் சிலர் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பார்கள். அப்படி இருந்தால் அவர்களுடைய பான் கார்டு செல்லாமல் போயிருக்கும். அவர்களுக்கு உங்கள் PAN ரீஃபண்ட் கிடைக்காது. இதுவும் நடைமுறையில் ஒன்றாகும்.'

அதேபோல் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட படிவத்தில், வருமானம், வரி விலக்குகள், TDS (மூலத்தில் கழிக்கப்படும் வரி) போன்ற தகவல்களில் ஏதாவது தவறை நீங்கள் செய்திருந்தால், ரீஃபண்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அதாவது நீங்கள் தாக்கல் செய்த படிவத்தில் உள்ள தகவல்கள், 26AS மற்றும் TDS சான்றிதழ்களில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போனால் தான் ரீஃபண்ட் கிடைக்கும். இந்த நடைமுறைகள் காரணமாக சில தாமதங்கள் ஏற்படுவது தொடர்கிறது.

Income tax refund be credited within 2 hours Surprising information

அதேநேரம் சிராக் சௌகான் என்ற ஆடிட்டர் வெளியிட்ட ட்வீட் பதிவில், மாலை 6 மணிக்கு ஐடிஆர் பைலிங் செய்யப்பட்டது. ஐடிஆர் பிராசஸ் இரவு 7மணிக்கு தொடங்கியது. 8 மணிக்கு வங்கி கணக்கில் பணம் கிரெடிட் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். இதை பார்த்து பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேநேரம் ஒரு சில நெட்டிசன்கள், ஒரே நாளில் வருமான வரித்துறை கிரெடிட் செய்வது நடக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு முதல் 10 ஆயிரத்திற்குள் ரீஃபண்ட் இருந்தால் ஒரே நாளில் கிரெடிட் ஆவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

அதேநேரம் உங்கள் ரீஃபண்ட் நிலையில் சிக்கல் இருந்தால் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (e-Filing portal) உள்நுழைந்து சரிபார்க்கலாம். அங்கு, 'View Filed Returns' என்ற பகுதிக்குச் சென்று, தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கின் நிலையைத் அறியலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+