வருமான வரி மெயில் வந்தாச்சா? 10 லட்சம் வருமானத்திற்கு 10 பைசா கூட வரி கட்டாமல் இருக்க சூப்பர் வழி
சென்னை: இந்த ஏப்ரல் மாதம் மாத சம்பளம் வாங்குவோர் வருமான வரி தொடர்பாக முக்கியமான முடிவினை எடுக்க வேண்டும்.. பழைய முறை அல்லது புதிய முறை என எதையாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.. இதில் எந்த முறையை தேர்வு செய்தால் நல்லது என்ற குழப்பத்தில் இருப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த பதிவு..
ஏப்ரல் மாதம் பிறந்தாலே புதிய நிதியாண்டு பிறந்துவிடும்.இந்த புதிய நிதியாண்டில் 5லட்சம் அல்லது ஏழு லட்சத்திற்கு மேல் ஆண்டு சம்பளம் வாங்கும் ஊழியர்கள், எவ்வளவு சம்பளம் உயர்வு வரும். வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டியதிருக்கும்.. எப்படி வருமான வரியை குறைக்கலாம்.. எதில் எல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்து திட்டமிடுவார்கள். அதேபோல் வருமான வரித்துறையும், நிறுவனங்களிடம் புதிய மற்றும் பழைய வருமான வரி முறை என எதையாவது ஒன்றை தேர்வு செய்ய இந்த மாதத்தில் தான் வலியுறுத்தும்.. இதன்படியே சம்பளத்தில் டிடிஎஸ் பிடிக்க சொல்லும்.

அந்த வகையில், முந்தைய ஆண்டான 2023-24 நிதியாண்டின் வருமான வரிச் சட்டங்கள் 2024-ஆம் நிதியாண்டில் அமலில் இருக்கிறது. இதில் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தேர்தலுக்குப் பிறகு வரவிருக்கும் முழுமையான பட்ஜெட்டில் ஏதாவது மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். ஆனால் அதுவரை, பழைய சட்டங்கள் இருக்கும்.
எனவே வரி செலுத்துவோர் 2024-25 நிதியாண்டில் பழைய அல்லது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பதை ஏப்ரல் மாதத்தில் தங்கள் நிறுவனத்தினற்கு தெரிவிக்க வேண்டும். இந்த தேர்வுதான் அடுத்த ஓராண்டிற்கு அவர்களின் சம்பள வருமானத்திலிருந்து கழிக்கப்பட்ட வரியின் அளவை தீர்மானிக்கிறது.
புதிய மற்றும் பழைய வருமான வரி முறை தேர்வு எதற்கு?
வருமான வரி சட்டத்தின்படி, 5 லட்சத்திற்கு மேல் மாதச்சம்பளம் பெறும் ஊழியர், தங்களுக்கு விருப்பமான வரி விதிப்பு முறையைத் தங்கள் நிறுவனத்திற்கு தெரிவிக்கவில்லை என்றால், புதிய வரி விதிப்புக்குள் தானாகவே வந்துவிடுவார். அதன்பிறகு புதிய முறையில் வருமான வரி அவர்களுக்கு வரி வசூலிக்கப்படும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர், நிதியாண்டின் தொடக்கமான இந்த ஏப்ரல் மாதத்தில் New Regime vs Old Regime வரி முறையைத் தேர்வு செய்யவில்லை என்றால், அவர்கள் சம்பளத்திலிருந்து அதிக வரி விலக்குகளைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாதம் மாதம் கைக்கு வரும் சம்பளத்தின் அளவை குறைத்துவிடமு. அப்படி வருமான வரித்துறைக்காக பிடித்தம் செய்யப்பட்ட கூடுதல் டிடிஎஸ் பணத்தை திரும்ப பெற ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும். இடையில் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அதாவது இப்போது New Regimeஐ தேர்வு செய்தவர்கள் அல்லது தேர்வு செய்யாதவர்கள் New Regime இல் இருந்து Old Regimeக்கு இடையில் மாறவே முடியாது. இறுதியாக ஐடி பைலிங் போது மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். அதனால் சம்பளத்தில் டிடிஎஸ் பிடித்தால் அதை திரும்ப பெற ஓராண்டு காத்திருக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த ஏப்ரல் 2023 இது பற்றி சுற்றிக்கையும் வெளியிட்டிருக்கிறது.
நீங்கள் உங்களுக்கு ஏதுவான வருமான வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், இந்த வருடம் எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்... இப்போது சம்பளம் எவ்வளவு மற்றும் வருமான வரி உங்களுக்கு எவ்வளவு விதிப்பார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதற்கு வருமான வரி தொடர்பாக முழுமையாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
சரி விஷயத்திற்குள் போவோம். 2024-25 நிதியாண்டில் ஒருவேளை நீங்கள் ஆண்டு சம்பளம் 7 லட்சத்திற்குள் சம்பளம் வாங்குறீங்க (அல்லது கிடைக்கும்) என்றால் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்யலாம். அதேநேரம் பழைய வரி விதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வரி விலக்குகள் மற்றும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.
புதிய வரி விதிப்பின் முக்கிய அம்சங்கள்:
அ)நீங்கள் எந்த வயதாக இருந்தாலும் ரூ. 3 லட்சம் அடிப்படை விலக்கு வரம்பு உங்களுக்கு பொருந்தும்.
b) சம்பள வருவாயில் இருந்து 50,000 ரூபாய்க்கான நிலையான விலக்கு உங்களுக்கு கிடைக்கும்
c) நிதியாண்டில் நிகர வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 7 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் செலுத்த வேண்டியது பூஜ்ஜியம் வரி. அதாவது வரியே கிடையாது.
d) பிரிவு 80CCD (2) இன் கீழ், அடுக்கு-I NPS கணக்கிற்கு உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு, வரிச் சலுகைக்குத் தகுதியுடையது.அதாவது பிஎப்பில் உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பும் இதில் வரும். அவ்வளவு தான் புதிய முறையில் கிடைக்கும் சலுகைகள்.
அது சரி, மாத சம்பளம் வாங்குறீங்க.. உங்கள் சம்பளம் ஒரு 10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.. நீங்கள் கண்டிப்பாக புதிய முறையை தேர்வு செய்வது தான் நல்லது. 7 லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறது.. சேமிக்கக்கூடிய நிலையில் உள்ளீர்கள்.. உங்கள் குழந்தைகளுக்கான கல்வி கடன் வாங்குறீங்க, உங்களுக்கு மருத்துவ செலவு இருக்கிறது.. நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி உள்ளீர்கள் அல்லது வாங்க போகிறீர்கள் என்றால், தாராளமாக 10 லட்சம் வருமானத்திற்கும் எந்த வரியும் உங்களுக்கு பழைய முறையில் இருக்காது.. எனவே இந்த செலவுகள் இருப்பவர்கள் அல்லது சேமிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் முடிந்த வரை பழைய முறையே தேர்வு செய்யுங்கள்..
2024-25க்கான பழைய வருமான வரி முறையைத் தேர்வுசெய்தால், அவர்கள் பல வரி விலக்குகள் மற்றும் விலக்குகளைப் பெறலாம். பழைய வரி விதிப்பின் கீழ் சிறப்பு அம்சங்கள்.
a, இதில் புதிய முறை போல் இல்லாமல் தனிநபரின் வயதின் அடிப்படையில் அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு மாறுபடும்: 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ 2.5 லட்சம், 60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ 3 லட்சம் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 5 லட்சம் வரை இருக்கிறது.
b) 1.5 லட்சம் வரையிலான பிரிவு 80C விலக்கு, சம்பள வருவாயிலிருந்து ரூ. 50,000 நிலையான விலக்கு, செலுத்திய உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களில் பிரிவு 80D விலக்கு மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) மீதான வரி விலக்கு போன்ற பல்வேறு பொதுவான விலக்குகள் இருக்கின்றது.
c) பிரிவு 80CCD (2) இன் கீழ், அடுக்கு-I NPS (பிஎப் கணக்கு) கணக்கிற்கான உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு, வரிச் சலுகைக்கு தகுதி பெறும் கூடுதலாக, தனிநபர்கள் பிரிவு 80CCD (1B) இன் கீழ் NPS முதலீட்டிற்கு 50,000 ரூபாய் கூடுதல் வரிச் சலுகை கோரலாம்.
d) பொதுவாக நிதியாண்டில் உங்கள் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பூஜ்ஜியம் வரி ஆகும். அதாவது 5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.. இதுதவிர வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவற்றிற்கும் வரி விலக்கு பெற முடியும்..
பழைய மற்றும் புதிய வருமான வரி விதிகள் இரண்டிலுமே 50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியில் கூடுதலாக 4% செஸ் செலுத்த வேண்டும் .
தற்போதைய நிலையில் நீங்கள் எந்த முறையை தேர்வு செய்வது நல்லது, எந்த மாதிரியான சேமிப்பு உள்ளது. கடன் வாங்க போகிறோமோ, அல்லது கூடுதல் வருமானம் வரப்போகிறதா என்பதை ஆராய்ந்து பொறுத்தமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்யுங்கள். ஒருவேளை தவறான வரி முறையைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் சம்பள வருமானத்தில் இருந்து அதிக வரிகள் கழிக்கப்படும்.
உதாரணமாக நீங்கள்ர் பின்வரும் விலக்குகளுக்கு தகுதியானவர் என்று வைத்துக்கொள்வோம்:
a) இரண்டு வரி முறைகளின் கீழும் 50,000 ரூபாய்க்கான நிலையான விலக்கு.
b) பழைய வரி ஆட்சியில் ரூ. 1.5 லட்சம் பிரிவு 80C விலக்கு.
c) NPS பங்களிப்புகளுக்குப் பழைய வரி முறையில் ரூ. 50,000 பிரிவின் 80CCD (1B) விலக்கு. பழைய வரி முறையின் கீழ், நீங்கள் ரூ. 2.5 லட்சத்தை மொத்தமாக விலக்கிக் கொள்ளலாம்.
புதிய வரி விதிப்பின் கீழ், சம்பளம் பெறும் தனிநபர் ரூ. 50,000 மட்டுமே கழிவுத் தொகையாக பெற முடியும்.
புதியதை விட பழைய வரி விதிப்பில் வரி அதிகம் என்றாலும். HRA வரி விலக்கு மற்றும் பிரிவு 80D விலக்கு போன்ற கூடுதல் விலக்குகளைக் கருத்தில் கொள்வது அவசியம் ஆகும். புதிய வரியுடன் ஒப்பிடும்போது பழைய வரி முறையின் கீழ் இவை குறைவான வரி தான் உங்களுக்கு வரும். எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுங்கள். அதேநேரம் சம்பளம் வாங்கும் உங்களுக்கு சொத்து விற்பனையிலிருந்து கூடுதல் வருமானம் வரலாம் அல்லது நிதியாண்டில் ஈக்விட்டி பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளிலிருந்து ஈவுத்தொகை கிடைக்கலாம்.. எனவே இந்த வருமானங்களை முன்கூட்டியே துல்லியமாக மதிப்பிட முடியாது என்பதால், 2024-25 நிதியாண்டு இறுதியில் ஐடி பைலிங்கின் போது New Regime அல்லது old Regime என எது செட் ஆகுமோ? அதை தேர்வு செய்யுங்கள்..












Click it and Unblock the Notifications