சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’சிக்கல்’ டெல்லியிலிருந்து பறந்து வந்த வார்னிங்! ஆர்எஸ்எஸ் பாஜக பிரமுகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

Google Oneindia Tamil News

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக தமிழகத்தில் பரபரப்பு நிலவிவரும் நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இதையடுத்து போலீசார் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களாக கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக,ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு சில அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர

 அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இது போன்ற நிகழ்வுகளால் தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வரும் நிலையில் தமிழக மற்றும் கேரளாவில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்களை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அமைப்புகள் மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும் எனவும் எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை கையாள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் கொடுத்த தகவலின் படி கேரளாவில் உள்ள ஐந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது எதை எடுத்து அவர்களுக்கு துணை ராணுவ படைகளை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியான முகமது பஷீர் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் 5 ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் பெயர்கள் இருந்ததாகவும் இந்த தகவலின் அடிப்படையிலேயே அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஆர்எஸ்எஸ் அமைப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு

இதேபோல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இரண்டு மண்டலங்களாக நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நான்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை அடுத்து அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பினர் வெளியே செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தகவல் அனுப்பியுள்ளதாகவும் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் ரசிக்கும் பகுதிகளில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

குறிப்பாக பாஜக இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரையிலான நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் எனவும், பாஜக இந்து முன்னணி பிரமுகர்களிடம் பாதுகாப்பு வழங்கப்பட்டதற்காக கையெழுத்து பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்நிலை தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Reports have surfaced that the police have increased security for the administrators of Hindu organizations after the Central Intelligence Agency has warned that there is a threat to BJP and RSS figures in Tamil Nadu due to issues such as raids on Popular Front of India offices and banning of RSS processions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X