ஓமிக்ரான்: நீங்க தப்பிக்கனுமா.. 2 விஷயம் ரொம்ப அவசியம்.. மத்திய நிதி ஆயோக் அறிவுறுத்தல்
ஓமிக்ரான் பரவல் சூழலில் முகக்கவசம் அணிவது குறைந்துள்ளதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
சென்னை: இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு என்பது 2வது அலைக்கு முந்தைய காலக்கட்டத்திற்கு சமமான அளவு குறைந்துள்ளது. முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
Recommended Video
இத்தகைய சூழலில் முகக்கவசம் அணிவது குறைந்துள்ளதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், முகக்கவசம் பயன்பாடு குறைவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறையத் தொடங்கிய பின்னர் முகக்கவசம் (Mask) அணிவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தடுப்பூசிகள் செலுத்துவதும் துரிதப்படுத்தப்பட்டது.
முகக்கவசம் அணிவது, சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பழக்கங்களை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க தொடங்கினர்.
கொரோனா 2வது அலை பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பழக்கங்கள் குறையத் தொடங்கியுள்ளது.
ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.
இத்தகைய சூழலில் முகக்கவசம் அணிவது குறைந்துள்ளதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், முகக்கவசம் பயன்பாடு குறைவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அளவில் ஓமிக்ரான் பரவலின் நிலை கவலை அடைய செய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, தற்போது நாம் ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ளாத முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு என்பது 2வது அலைக்கு முந்தைய காலக்கட்டத்திற்கு சமமான அளவு குறைந்துள்ளது. முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச சூழல்களை பார்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications